குலசேகரம் ஜூன் 26, 2022

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனும் இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் ஸ்டேஷனில் கையெழுத்து போடச்சென்று திரும்ப வராததால் கலக்கத்தில் இருந்த தாய் தனது மகனின் இறப்பு தகவல் கேட்டு பத்திரிக்கையாளர்களிடம் நீங்கள் தான் எனக்கு நீதி வாங்கித் தர வேண்டும் என்று கதறி அழுதார்.

பக்கத்து வீட்டில் நடந்த பிரச்சினையில் சிறைக்குச் சென்று கண்டிஷன் பெயிலில் வந்த இளைஞரை கையெழுத்திட அழைத்துச் சென்ற போலீசார் அவ்விளைஞர் விஷமருந்தி விட்டதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தியொன்றை சொல்லி தாயை அழைக்கவும் ஆனால் அவர் சந்தேகம் கொண்டு இருக்கையில் மீண்டும் அவருடைய தலையில் இடி இறங்கியது போல தன் மகனின் இறப்புச் செய்தியை கேட்டு நிலைகுலைந்து நிற்கிறார்.

நூற்றுக்கணக்கான சட்டங்கள் அதற்கு தகுந்த தண்டனைகள் தரும் நீதிமன்றங்கள் இருக்கும்பட்சத்தில் அச்சட்டத்தை தாங்கள் கைகளில் எடுத்து உயிரைக் குடிக்கும் வகையில் அதனை பிரயோகிப்பது எந்த வகையில் நியாயம்.

முக்கியமான துறையான காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் இதற்கான விடையை என்று தருவார் இத்தகைய மரணங்களை நிகழாமல் விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மய்யதமிழர்கள் கேட்டுக்கொள்கிறது.