சென்னை, செப்டெம்பர் 25, 2022

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர் மாற்றி ஒருவர் மத நூல்களை பேசி விருப்பு வெறுப்புகளை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவது ஆரோக்கியமானதே ஆயினும் மதங்கள், சாதி, இனம் என அதில் புகுத்திப் பெரிய ஆளுமை நான் தான் இல்லை நான் தான் என எதிரெதிர் துருவங்களாக மோதிக்கொள்ளும் போக்கு மிக அபாயகரமானதாகும்.

இங்கே யாருடைய கடவுளர் உசத்தி என்பதெல்லாம் அவசியமற்ற மோதல்கள், எந்தக் கடவுளும் முன் தோன்றி நீங்கள் மதத்தின் பேரால் அடித்துக் கொள்ளுங்கள் என சொல்லிச் சென்றதில்லை. பின் ஏன் இந்தப் பிளவுகள், வார்த்தை மோதல்கள், வியாக்கியானங்கள், அவசியமற்ற வீண் வாதங்கள் வெற்று கோஷங்கள்.

இதனை அடுத்த வடிவங்களுக்கு கொண்டு செல்வதே இது போன்ற பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் மிதந்து அவைகளை நெஞ்சினிலும் புத்தியிலும் சுமந்து கொண்டு திரிவது அதனால் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது. இந்த மோதல்களின் உச்சமே பல கலவரங்களை ஏற்படுத்த பலரை நகர்த்திவிடுகிறது.

வீசப்படுவது பெட்ரோல் குண்டுகள் அதனால் பாதிப்புகள் அவ்வளவாக பெரிதாக உண்டாக வாய்ப்பு இல்லை என பல கதைகளை கொண்டு வருவர். வீசப்பட்டது பெட்ரோல் குண்டுகளோ அல்லது தடை செய்யப்பட்ட எந்த குண்டுகளோ அவையின் அளவோ வீரியமோ அல்லது தாக்கமோ பெரிதோ சிறிதோ என்பதல்ல இங்கே கேள்விகுறி. எதற்காக இந்த வன்முறையை கையில் எடுக்கிறார்கள் அவ்வளவு வன்மங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியமென்ன ? வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் மூலம் பெரிதான விளைவுகள் கூட ஏற்படலாம்.

யார், எவர், எதற்காக இந்த பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது என்று விரைவில் விசாரணையை துவக்கி கண்டுபிடிக்க வேண்டும். இந்த பெட்ரோல் எறிகுண்டுகள் கலாசாரம் தொடருமானால் வீதிக்கு அமைதிப் பூங்காவென பெயர் பெற்ற தமிழகம் அப்பெயரை இழக்கக்கூடும்.

மக்கள் நீதி மய்யம் நடுநிலை வகிக்கும் ஓர் தூய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. துவக்கும்போது இதெல்லாம் எதற்கு என்று பகடி பேசியவர்கள் இன்று 5 ஆவது ஆண்டில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் போது வியந்து நிற்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப்போக்கை வன்மையாக கண்டிக்கிறது மேலும் அதே சமயம் உபயோகரமான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படுகிறது என்றால் பாராட்டவும் தயங்காது செயல்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை வெற்றி வாய்ப்புகள் இழந்தாலும் கூட மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தர வேண்டும் என ஒவ்வொரு நாள் தவறாமல் மக்கள் தரப்பில் இருந்து கவனித்து நியாயமான வாதங்கள், கோரிக்கைகள் என தயங்காமல் அரசுகளின் முன் வைக்கிறது.

கொள்கைகள் ரீதியாக பிஜேபி மற்றும் இதர அமைப்புகளுடன் முரண் கொண்டிருந்தாலும் மேற்கண்ட கட்சிகளின் நிர்வாகிகள் மீது வன்முறையை ஏவிவிடுவது அல்லது இது போன்று பெட்ரோல் குண்டுகள் எறிவது என ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றே சொல்லலாம். மேற்படி செயல்களை செய்யும் நபர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்காமல் அவர்களை சட்ட பூர்வமாக கைது செய்யாமல் இருப்பது தவறு. ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை அதன் ஸ்திரத்தன்மையை வலுவிழக்கச் செய்துவிடும். அரசியல் சாசன அமைப்பில் சீரிய மாண்பில், அறத்தின் பால், அஹிம்சையின் பால் அதீத நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஓர் அரசியல் கட்சி. அரசியலை உற்று நோக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக அமைப்பில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கும் போது வன்முறைகளை கையிலெடுத்து நடக்கும் சட்டவிரோதப் போக்கினை உடைய அந்த மர்ம நபர்களை இனம் கண்டுகொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம். ஏன் எனில் இன்றுவரை ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை விடாமல் விதைத்துக் கொண்டே களமாடி வருகிறது ம.நீ.ம என்றால் மிகையாகாது.

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படவிருக்கிறது அஹிம்சையையும் அறத்தையும் போதித்ததோடு நின்று விடாமல் தம் இறப்பின் இறுதிவரையில் அதன்படியே நடந்து கொண்டவரின் பிறந்த நாள் இரத்தத்தில் கொண்டாடப் படவேண்டும் என்று எண்ணுவோரை வெளியில் நடமாட விடாமல் அவர்களின் தீய எண்ணத்தினை பொசுக்கி அமைதியாக அண்ணலின் நினைவுகளை போற்றிட வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் விரிவான அறிக்கை

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும்.” – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன்

“வன்முறையை எதிர்ப்போம் ! நாங்கள் வன்முறையைக் கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும், நானும் வன்மையாக எதிர்க்கிறோம். – மக்கள் நீதி மய்யம்”

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02zg8Eqji8ziEMnpYFwpjdyTmYT1eUHDc9b4knQi896BbjdJT8Fd9UBK3RVHNCzJd4l&id=100064347773678

“வன்முறை கலாசாரத்தை அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்ட வேண்டும்” – தமிழகத்தில் நிகழும் பெட்ரோல் குண்டுகள் வீசுவதை கண்டித்து தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை சுவரொட்டிகளாக மக்கள் நீதி மய்யம் – மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் நகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.