சென்னை – செப்டெம்பர் 26, 2022

சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அங்கே பணிபுரிந்து வந்த ஆயிரகணக்கான தொழிலாளர்கள் பணியிழக்கும் சூழலும் மட்டுமல்லாது கார்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து தரும் சுமார் 70 ற்கும் மேற்பட்ட சிறு சிறு தனியார் தொழிற்கூடங்களும் நசிந்து விடும் சூழல் உருவாகும், அந்த சிறு குறு தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிகளும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். எனவே மூடப்படுவதாக சொல்லப்படும் கார் தொழிற்சாலையான போர்டு நிறுவனத்தினால் பல தரப்பட்ட பணியாளர்களும் தங்கள் பணிகளை இழக்கக்கூடும் அபாயம் உண்டாகும்.

1995 ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக வின் ஜெயலலிதா அவர்களின் அரசு போர்டு கார் தொழிற்சாலை அமைத்திட ஏராளமான சலுகைகளும், பல தளர்வுகளும், வரிவிலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டதை எதிர்த்தார் மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல உள்நோக்கங்களை கொண்டது எனவும் கடுமையாக விமரிசித்தார் அப்போதைய எதிர்கட்சியான திமுகவின் தலைவர் திரு கருணாநிதி அவர்கள். ஆயினும் தொழில்துறை வரலாற்றைப் பொறுத்தவரை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில் பல அரசு அதிகாரிகள் உழைப்பு இருந்தது ஆனால் பிற்பாடு கமிஷன் சாம்ராஜியத்தால் இந்த கார் கம்பெனிகள் அல்லாடியதும் தங்களுக்கு வரவேண்டிய மதிப்புக் கூட்டு வரி பங்கினை வாங்குவதற்கு கூட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்ததும் தான் இந்த கழகங்களின் ஊழல் மலிந்த ஆட்சியின் சாட்சியாகும். 1995 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் 1996 ரூ.1500 கோடிகள் முதலீட்டில் போர்டு நிறுவனம் சென்னையில் தன் கார் தயாரிப்பைத் துவங்கியது முதல் 2021 வரை பலதரப்பட்ட கார்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வந்தது. இதனிடையில் நிர்வாக சீரமைப்பின் காரணமாக கார் கம்பெனி நிரந்தரமாக மூட ஆயத்தமானது கண்டு கலங்கிய தொழிலாளர்கள் அமைப்பு கூட்டாக பல தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களையும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர் பிரதிநிதிகள். தலைவரும் அரசின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்று கார் கம்பெனி மூடப்படக்கூடாது என்றும் தொடர்ந்து இயக்குவதற்குண்டான காரியங்களை விரைந்து செய்து தருமாறு அறிக்கையின் மூலமாக கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து முதல்வர் அவர்களும் முயற்சி எடுப்பதாக கூறினார். ஒரு வருடத்தை கடந்துவிட்ட பின்னர் தொடர்ந்து எங்களுக்கு நட்டம் ஏற்படுவதால் எங்களால் கார் தொழிற்சாலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தது போர்டு நிர்வாகம் இந்நிலையில் சென்னை போர்டு தொழிலாளர்கள் உரிமைக்கான குழு போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பாக தொழிற்சாலையை மூடும் முடிவையும் இதில் பணிபுரிந்து வரும் தொழிலார்களின் நலனையும் அவர்களின் பணிப்பதுகாப்பினையும் உறுதி செய்து தரும்படி தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைத்தும் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்துள்ள மேற்படி அமைப்பிற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் சார்பிலும், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை சார்பிலும் அதன் மாநில தலைவர் திரு பொன்னுசாமி அவர்கள் தலைமையில் பல நிர்வாகிகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மிக முக்கியமான தகவலாக ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். தமிழகம் மற்றும் குஜராத் மாநிலத்தில் இயங்கிவரும் போர்டு இந்தியா கார் தொழிற்சாலை இரண்டையும் மூடப்போவதாக அறிவித்த நிர்வாகம் அப்படிச் செய்யாமல் குஜராத்தில் உள்ள கார் தொழிற்சாலை தொடர்ந்து இயக்கி வருகிறது ஆனால் தமிழகத்தில் மட்டும் நிரந்தரமாக மூடுவதற்கு முயற்சியை எடுத்து வருவது ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயலாகவே உள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியினை இழக்கும் அபாயம் உள்ள நிலையில் தொழிலாளர்கள் அடுத்த வரும் காலங்களில் தங்கள் குடும்பம் எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறது எனும் கேள்விக்குறியுடன் இந்த அறப்போரட்டத்தில் பங்கெடுத்து கொண்டனர்.

தாங்கள் ஆளும் மாநிலத்தில் அயல்நாடு மற்றும் உள்நாடு நிறுவனங்கள் முதலீடு செய்ய முயலும்போது அதனை வரவேற்று விரைவாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் ஆட்சியாளர்கள் அதன் பின்னர் அந்த நிறுவனங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தொழில்துறை அமைச்சகம் மூலம் சரியாக கிடைக்கப் பெறுகிறதா எனவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எந்தவித தீங்கும் இன்றி தொடர்ந்து இயங்குகிறதா என்றும் கண்காணிக்க வேண்டியது முக்கிய அம்சமாகும். ஏன் என்றால் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கபெறும் வருவாயினால் மக்களுக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொய்வில்லாமல் கிடைக்கப்பெறும்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று நடைபெற்ற சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் உரிமைக்கான குழு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் சார்பில் கலந்து கொண்டு கடந்த ஆண்டு நம்மவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி கட்சியின் தார்மீக ஆதரவை தெரிவித்தோம்.

2021 ஆம் ஆண்டில் சென்னை போர்டு கார் தொழிற்சாலை மூடப்படக்கூடாது என மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட அறிக்கைகள் (கோப்புப் படம்)

https://youtu.be/rHcnTGYDx9k