நெல்லை – செப்டெம்பர் 26, 2022

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம், நெல்லை மாவட்டம் விருதுநகரில் 25.09.2022 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் கட்டமைப்புகள், அணிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய ஆலோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நெல்லை மண்டலம், விருதுநகரில் நேற்று (25-09-2022) நடைபெற்ற கட்சிக்கட்டமைப்பை வலுப்படுத்தும் கூட்டம்.!! மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ, மாநில இணைச் செயலாளர் திரு ஜெய் கணேஷ் மாநில துணைச் செயலாளர் திரு PS ராஜன், மாவட்ட செயலாளர் திரு காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.