ஸ்ரீவில்லிபுத்தூர், செப்டெம்பர் 27, 2022

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்ந்திருக்கும் அணிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்டங்கள் தோறும் நடந்து வருகிறது. அக்கூட்டங்களை தலைமையேற்று நடத்தி செல்லும் மாநில செயலாளர்கள், இணை மற்றும் துணை செயலாளர்கள் அதன்படி நெல்லை மண்டலம் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் நேற்று 26.09.2022 திங்கட்கிழமையன்று மாவட்ட கிளை நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் திரு ஸ்ரீ பாலாஜி அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், கொடிகள் நடுதல், கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லுதல் மற்றும் கள நிலவரங்கள், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.