சென்னை ஜூன் 09, 2022
நல்லா இருக்கு உங்க நியாயம். 2019 இல் 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் LKG UKG தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 70000 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனோவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆனால் புதிய சேர்க்கைகள் ஊரடங்கு காலங்களில் நடை பெறவில்லை. தற்போது இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கைகள் தொடங்கும் என எதிர்பார்த்த பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எண்ணத்தில் மண்ணைப் போட்டு மூடும் செயலை அரசு கையில் எடுத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு யாருக்காக ? வருமானம் சொற்பமாக இருக்கும் நிலை உள்ள பள்ளி செல்லத் துவங்கும் குழந்தைகள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளை அணுக நேரிடும். அதற்கு வசூலிக்கப்படும் தொகை ஒவ்வொரு பள்ளிக்கும் மாறுபடும். இந்தச் சுமையை எப்படி அவர்கள் எதிர்கொள்வது என விக்கித்து நிற்கின்றனர்.
இளிச்சவாயன் எனும் நான் : LKG UKG வகுப்புகள் (ஸ்கூல்) மூட ரெடி ஆயிட்டீங்க எப்போ சார் டாஸ்மாக் மூடப் போறீங்க ?
தமிழக அரசு : யோவ் இன்னுமாய்யா நாங்க டாஸ்மாக்கை மூடுவோம்னு நம்பிட்டு இருக்கே 😂😂😂😂