சென்னை ஜூன் 07, 2022

வறுமைக்கோட்டுக்கு கீழேயும் மத்திய வர்க்க குடும்பத்தினரும் நம்பியிருக்கும் அரசின் செயல்திட்டங்களில் முக்கியமான ஒன்று உணவுப்பொருள் வழங்கும் நுகர்வோர் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடைகள் மூலம் சலுகை விலையிலும் அரிசியை இலவசமாக விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்கள்.

ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் அகவிலைப்படி உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கருத்தில் கொள்ளாத தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை தற்போது அறிவித்திருப்பது என்னவெனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் பணிக்கு வராத நாட்களில் சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று வெந்த புண்ணில் எண்ணையை ஊற்றி இன்னும் எரியச் செய்துள்ளார்கள்.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் ரேஷன் கடை ஊழியர்களின் போராட்டத்தின் அவசியத்தையும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக் கொள்வதாக செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/district/tamil-news-ration-shops-closed-13th-in-chennai-469582?infinitescroll=1

https://tamil.indianexpress.com/tamilnadu/ration-shop-workers-protest-no-work-no-pay-tn-govt-order-463922/