கிராம சபை எனும் ஓர் ஒப்பற்ற அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பு ஒன்று இருப்பதை இதுவரை ஆண்டுவந்த கழக கட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்ததில்லை.
கிட்டத்தட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கொண்டது கிராம சபை. இதனைப்பற்றி நாம் முன்பே விரிவாக எழுதி உள்ளோம்.
மேலும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் நேர்காணல்களில், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கட்சியின் பொதுகூட்ட மேடைப் பேச்சில் பாராளுமன்ற சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைகளின் போதும் பேசி விவரித்துள்ளார். இப்படி ஓர் அமைப்பு உள்ளதென்று எனக்கும் சரிவர தெரியவில்லை அதனை பற்றி தெளிவாக விளக்கிச் சொல்லிய நமது மாநில செயலாளர்கள் திரு செந்தில் ஆறுமுகம் மற்றும் திரு சிவா இளங்கோ ஆகிய இருவரின் வழிகாட்டுதலின்படியே இதனை பிரதானமாக முன்னெடுத்துப் பேசி வருகிறேன் என்றும் பெருமிதமாக பேசியுள்ளார்.
இதற்கும் முதலான கட்சிகள் எதுவும் உதாரணமாக தேசிய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி கிராம சபை என்ற ஒன்றை இருப்பதாக எங்கும் காட்டிக் கொள்ளவில்லை என்றும் அதனை மறைப்பது சட்ட விரோதமான செயலும் ஆகும். 2018 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கிராம சபையை நிச்சயம் ஒவ்வொரு வருடமும் அதற்குரிய நாட்களில் நடத்தியே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக நின்று நடக்க வைத்ததில் பெரும்பங்கு உண்டு.
அப்படி நடைபெற்ற ஓர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுஜனம் ஒருவர் அங்கே இருந்த அதிகாரியை நோக்கி “அதிகாரபூர்வமாக நடக்கும் கிராமசபை பற்றிய முறையான அறிவிப்புகளை நீங்கள் ஏன் பொதுமக்களான எங்களைப் போன்றோருக்கு தெரியபடுத்தவில்லை எனவும் இப்படி ஒரு கிராம சபை நடக்கவிருப்பதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் போஸ்டர் அறிவிப்பினை (சுவரொட்டிகள்) மூலம் தெரிந்து கொண்டு வந்துள்ளேன்” என கூறியது பெருமை கொள்ள வைக்கிறது.
நீதியின் பாதை, நேர்மை நெறி தூய்மை அரசியல், துளியும் ஊழல் கறைபடாத கரங்களும் வெள்ளை மனமும் கொண்ட தலைமை உள்ள கட்சி அதுவே மக்களுக்கான அரசியல் என என்றும் களத்தில் மக்களுக்காகவே மக்களால் இயங்கும் கட்சி மக்கள் நீதி மய்யம்.