சிங்காநல்லூர் ஜூன் 11, 2022

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாபாளையம் அருகில் ஓர் புதர் மறைவில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி.

செடி கொடிகள் மண்டி புதராக இருந்த அவ்விடத்தில் பிறந்து சில நாட்களே ஆகி இருக்கும் என யூகிக்கப்படும் அளவில் அரிசி சாக்குப்பையில் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையின் கூக்குரல் அழுகையை கேட்டு அக்குழந்தையை மீட்டு எடுத்துக் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்து அதற்குத் தேவையான மருத்துவ உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து முடித்த மனிதாபிமானத்தின் வடிவாய் விளங்கிய திரு பார்த்தசாரதி அவர்கள் மக்கள் நீதி மய்யம் 59 ஆவது வார்டு வட்டப் பொருளாளராக நமது கட்சிப் பணிகளை தொய்வில்லாமல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கருணை கொண்ட அருஞ்செயலை கேட்டுணர்ந்த நமது மய்யம் மாநில துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்கள் பார்த்தசாரதி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு கட்சியின் சார்பாக தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் திரு பார்த்தசாரதி அவர்களை நேரில் அழைத்த மாவட்டச் செயலாளர் திரு மனோ ரம்யன் அவர்கள் தமது வாழ்த்துகளை பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டதோடு கௌரவிக்கும் வண்ணம் பொன்னாடை போர்த்தி மனிதாபிமான இச்செயலுக்கு நன்றி தெரிவித்து உளம் மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் திரு K.மயில்கணேஷ் மாவட்ட துணை செயலாளர் மாநகராட்சி, செயலாளர்கள் திரு ரகுபதி மற்றும் திரு சம்பத் குமார் மற்றும் மாநகராட்சி பொருளாளர் திரு கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்ற நிலையிலும் உயிருக்குப் போராடிய ஓர் பச்சிளம் குழந்தையினை மீட்டெடுத்து அதற்கான உதவிகளை செய்து தந்த திரு பார்த்தசாரதி அவர்களை மய்யத்தமிழர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

https://t.co/zXM6TLyQeu