சென்னை ஜூன் 12, 2022

தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை வைத்திடவோ இருந்ததில்லை.

அடிக்கடி அவர் இப்படித்தான் சொல்வார் “நான் நற்பணி செய்திட நன்கொடைகள் செய்திட முற்படுகையில் எனது சட்டைப்பையில் இருந்து 10 ரூபாய் எடுத்து நற்பணிக்காக செலவிட்டேன் என்றால் எனது ரசிகர்கள் மற்றும் கட்சி துவங்கியபின்னர் தொண்டர்கள் தங்கள் சார்பாக இன்னும் கூடுதலாக அதாவது 20 ரூபாயை எடுத்து நற்பணிக்காக செலவிடுவார்கள் இது எனக்கு கிடைத்த பெருமை இப்படிப்பட்ட பெரிய மனதுடையவர்களை எனது ரசிகர்களாக தொண்டர்களாக நிர்வாகிகளாக பெற்றிருக்கிறேன்” என பெருமை பொங்கச் சொல்வார்.

மக்கள் மத்தியில் பெரும் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய ஒரு முக்கியத் தேவை மனிதர்களின் இரத்தம். அறுவைசிகிசைகாக, மகப்பேறுக்காக அல்லது விபத்துகளின் போது பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காத்திட இரத்தம் அத்திவாசியமான உயிர் காக்கும் விலைமதிப்பற்ற திரவம். அதை எந்தத் தங்குத் தடையும் இன்றி விரைவாக கிடைத்திட வழிவகை செய்யும் திட்டம் ஒன்றை மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்து அதனைச் செயல்படுத்த முடிவுசெய்துள்ளது.

வரும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்த தான நாளாக நிகழ்த்தபடுகிறது எனவே கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலமாக கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இரத்ததானம் செய்து வந்ததை ஒருங்கிணைத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஸ் ப்ளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. அதன் தொடக்கவிழா நாளை அதாவது ஜூன் 13ஆம் (13.06.2022) தேதியன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணியளவில் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் துவக்கி வைக்கவிருக்கிறார், அதனை சிறப்பான விழாவாக நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கட்சியின் சார்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பூமியும் அதன் இயற்கை மழையும் கூட அதற்கேற்ற பருவகாலங்களில் மட்டுமே பொழியும் ; ஆனால் மக்கள் நீதி மய்யம் & கமல் ஹாசன் நற்பணி இயக்க அணியும் தாங்கள் செய்யும் நற்பணிகளை வருடத்தின் அனைத்து நாட்களிலும் தொடர்ந்து செய்து வருவார்கள் என்பது இப்புதிய திட்டத்தின் மூலமாக இன்னும் மேலதிகமாக நிரூபணம் ஆகிறது.

https://www.maalaimalar.com/news/district/kamal-haasan-launches-fast-blood-transfusion-program-tomorrow-471686