சென்னை ஜூலை 22, 2022

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! மக்கள் நீதி மய்யம் வரவேற்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும் தேர்தல் சீர்திருத்தம்!

மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இதற்கான பணிகளை தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இத்திட்டத்தால் கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் ஓர் நல்ல தீர்வும் உள்ளதால் இதனை முழு மனதுடன் நமது மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் சார்பில் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.