புது தில்லி ஜூலை-08, 2022
டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
உயர்தரமான அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டபல நலத் திட்டங்களைச் செயல்படுத்தியும், அரசு லாபத்தில் இயங்குவது நேர்மைக்குச் சான்று. ஓர் அரசும், அமைச்சரவையும் நேர்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை.
டெல்லி மாநில அரசு போல, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உபரி வருவாய் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்ச நேர்மையையும், வீண்செலவுகளைத் தவிர்ப்பதையும் பின்பற்றலாமே? மத்திய அரசும்தான்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அம்மாநிலத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் திறம் கொண்ட நிர்வாகத்தினால் மட்டுமே. அப்படி சிறந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்திட நேர்மையான தலைமையை கொண்ட கட்சி அமைந்திட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு மக்கள் நீதி மய்யம் மட்டுமே.