சென்னை ஜூன் 16, 2022

மிகத் தொன்மையான மொழிகளில் தலையாயது அழகிய தமிழ் மொழியே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழி செம்மொழி எனும் சிறப்பை பெற்ற மொழியும் அதுவே.

பல தமிழறிஞர்கள் தமிழின் முக்கியத்துவத்தை பல வழிகளில் முன்னெடுத்துக் கொண்டு சென்றனர். மிக நீண்ட நெடிய வரலாறு கொண்டதும் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளும் அதனை நூல்களை கொண்டு அதன் தன்மை மாறாது வழங்கிய காலங்களும் உண்டு. தினமும் தமிழின் சிறப்பு உலகெங்கிலும் போற்றப்பட்டு வருவது ஒன்றே சான்று.

தொன்று தொட்ட காலம் முதலே தமிழும் தமிழுக்காக அரும்பாடுபட்டு காப்பியங்களை அகராதிகளை செய்யுள்களை தேடித் தேடி தொகுத்த தமிழ் வல்லுனர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள் பற்றிய பிழைகளற்ற களஞ்சியமாக திகழும் வகையில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களும் அவருடைய குழுவினரும் அரும்பாடுபட்டு தமிழ் விக்கி எனும் இணையக்கலை களஞ்சியம் ஒன்றை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் கரங்களால் வெளியிட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தமிழ் விக்கியினை தங்களது பயன்பாட்டுக்கு உகந்ததாக உணரலாம்.