சென்னை ஜூலை 14, 2022

நீங்கள் மன்னரா இல்லை மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் பேச்சுரிமை மறுக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல! மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ? எம்.பி.க்களின் பேச்சுரிமையை மறுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்! – தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிக்கை.

மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றபின்னர் தான் தங்கள் உண்மை முகங்களை காண்பிக்கின்றனர் ஆளும் கட்சிகளின் தலைவர்கள்.

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடித்து ஒன்றிய அரசாக தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது முன்னுக்கு பின் முரணாக பல சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றி வருவதும் அனைவரும் அறிந்ததே.

ஒவ்வொரு நாளும் என்ன மாதிரியான மாற்றங்களை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றங்கள், சமையல் எரிவாயு என பல திக் திக் மாற்றங்களைக் கொண்டுவருவார்கள் என்று யோசிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கையில் இன்றைக்கு ஒன்றிய அரசான ஆளும் பிஜேபி அரசு புதியதொரு எதேச்சதிகாரப் போக்கின் மற்றொரு வடிவாக புதியதொரு அடக்குமுறையாக மேற்சொன்ன இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முறையே மக்களவை மாநிலங்கவைகளில் கிட்டத்தட்ட 11 வார்த்தைகளை குறிப்பிட்டு அல்லது மேற்கோள் காண்பித்து பிரதமரை, அமைச்சர்களை மற்றும் எம்.பி-க்களை என எவரையும் எதிர்கட்சியின் எம்.பி-க்கள் மற்றும் மாற்றுக் கட்சிகளோ என எவரும் குறிப்பிட்ட வார்த்தைகளை உபயோகித்து பேசக்கூடாது என பாராளுமன்றத்தின் செயலர் மூலம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இந்திய ஜனநாயகத்தின் பேச்சுரிமையை தடுப்பதும் ஆகும்.

இப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பினை உற்று நோக்கும்போது நாம் 1947 இல் ஆங்கிலேயரின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்பதையும் அல்லது மன்னராட்சி நடப்பது போன்றும், இன்னும் சொல்லப் போனால் சர்வாதிகார போக்கினை கடைபிடித்த ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துகிறது என்றால் மிகையாகாது.

இப்படி ஓர் அதிகாரப் போக்கினை தொடர்ந்து கடைபிடித்துவரும் ஒன்றிய ஆளும் அரசான பிஜேபி யின் “தான்” எனும் எண்ணத்தினை பறைசாற்றுவது போலுள்ளது.

இறுதியாக இன்னும் சிறிது நம்பிக்கை துளிர் இருக்கிறது ; மக்களின் விரல்களின் இடும் மை கருமையாக இருப்பினும் மனதாலும் தம் செயல்களினாலும் நேர்மை எனும் தூய நல் அரசியலை தாங்கி வரும் ஓர் கட்சியான மக்கள் நீதி மய்யத்தினை தேர்வு செய்வார்கள் என.