ஜூலை 12, 2022


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையிலிருந்து 30 நாட்டிகல் தொலைவில் உள்ள காரை நகர் பகுதியில் இலங்கை கடற்படையினர்,
6 மீனவர்களைக் கைது செய்ததுடன், அவர்களது படகையும் பறிமுதல் செய்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தினரின் தொடர் அத்துமீறலை வேடிக்கைப் பார்க்காமல், நிரந்தரத் தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மீனவர்களையும், படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.