எழும்பூர், ஜூன் 30, 2022

ஊழலும், முறைகேடுகளும் கறைபடிந்த நிலையில் கட்சிகளுக்கு மத்தியில் நிற்கும் நமது மக்கள் நீதி மய்யம் கொடி அப்பழுக்கற்ற வெண்மை நிறங்கொண்டு ஆறு தென்மாநிலங்களில் நட்புறவோடு நிலவும் ஒற்றுமை வேண்டும் என்றும் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கட்சிக் கொடிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்தோறும் ஏற்றப்பட்டு வருகிறது.

அவ்வகையில் சென்னை எழும்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா ஐபிஎஸ்-(பணி ஓய்வு) அவர்களின் தலைமையில் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் உடனிருக்க சிறப்பான முறையில் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.