மதுரவாயல் ஜூலை-01, 2022

மதுரவாயல் தொகுதி, சென்னை மாநகராட்சி, மண்டலம் – 11 வளசரவாக்கம் 151வது வட்டம்,போரூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள மின்சார மற்றும் எரிவாயு எரியூட்டு மின் மயானம் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து செயல்படாமல் இருப்பதை சரி செய்யக்கோரி 30.6.22 அன்று சென்னை மாநகராட்சி மண்டலம் – 11 வளசரவாக்கம்,மண்டல குழு தலைவர் திரு.வே.ராஜன் மற்றும் மண்டல அலுவலர் திரு.சுகுமார் ஆகியோரை சந்தித்த திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் திரு பாசில் அவர்கள் தலைமையில் புகார் மனுவை வழங்கினார் மேலும் இம்மனுவினை ஏற்றுக் கொண்ட மண்டல குழு தலைவர் அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதனை சரி செய்வதாக நமது மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலாளர் மற்றும் உடனிருந்த நம் நிர்வாகிகளிடம் உறுதியளித்தனர். இந்நிகழ்வின் போது மய்யத்தின் மதுரவாயல் நகர செயலாளர் திரு.மதிவாணன் உடனிருந்தார்.