குமாரபாளையம் ஜூலை 28, 2022

தேவர் மகன் படத்தில் வசனம் வரும் விதை போட்டு மரம் வளர்ந்து நிற்கும் பின்னர் வரும் தலைமுறைகள் அதனால் பயன் பெறும் என்று அந்த உரையாடல் இன்று வரை ஓர் சிறந்த உதாரணம் ஆகும்.

சமீபத்தில் கூட நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் தலைவர் இப்படி தான் சொன்னார் நற்பணியே முதல் அரசியல் மக்களுக்கு நல்லது என்று தோன்றினால் அதை நிச்சயம் செய்து முடிக்க வேண்டும் கொடிக்கம்பம் இல்லை என்றால் கூட பரவாயில்லை நான் என்ன சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு வீதியிலும் செடி நட்டு அதை பராமரித்து மரமாக வளர்ந்து நிற்கும் வரை உங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும். அந்த மரத்தை உங்கள் பிள்ளை போன்று வளருங்கள். அப்போது அந்த மரத்தில் நமது கட்சிக் கொடியை கட்டிக் கொள்ளுங்கள் ஒரு போர்டு வைத்து கொள்ளுங்கள்” – என்றார்.

ஆரம்பம் முதலே மகளிர் அணியில் அங்கம் வகிக்கும் திருமதி சித்ரா பாபு அவர்களின் சீரிய அரசியல் பணிகள் அப்பகுதியில் பெரும் சவாலாக இருக்கும் அத்தியாவசிய தேவைகளை அரசு அலுவலகங்களில் இருந்து கேட்டுப் பெற்று அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து செய்து தருகிறார்.

தேங்கி நிற்கும் கழிவு நீர் கால்வாய்கள் சீரமைத்தல், குப்பைகளை அகற்றுதல், இரவு நேரங்களில் வீதிகளில் எரியாத மின்சார விளக்குகளை சீர் செய்ய அழுத்தம் தருதல் என பெரிய பட்டியலில் சேர்க்கலாம்.

தற்போது தலைவர் கூற்றுப் படி விதிகளில் மரம் வைத்து வருகிறார். அவரது மேன்மையான பணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் என்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

https://twitter.com/Dinesh4MNM/status/1552698632008134657?t=XQD5sMGAoheuBPArkwrB9A&s=19