சென்னை ஜூலை 04, 2022

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், மநீம தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஏரியா சபையை(கிராம சபைக்கு இணையான நகர்ப்புற அமைப்பு) விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஏரியாசபை அமைப்பதற்கான சட்டமானது 2010ல் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இதுநாள்வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த 21-02-22 அன்று, மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து ஏரியா சபை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.