சென்னை ஜூலை 5, 2022

கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே.

எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம். அதன் தொடர்ச்சியாக வார்டு சபை ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று அதனையும் கருத்தில் கொண்டு விடாமல் வலியுறுத்தி வந்த உறுதியை தொடர்ந்து தமிழக அரசு இந்த முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை செயல்படுத்தக் கோரி அழுத்தம் கொடுத்து வந்த மய்யத்தின் அடுத்த வெற்றி என்றே பெருமையுடன் கூறலாம்.

இந்த முயற்சியில் விடாமல் ஒலித்த குரல் தலைவரின் குரல். அதன் வெளிப்பாடாக இந்த மகிழ்ச்சியை இப்படி விவரித்துள்ளார். இதுபோன்ற சிறப்பான மக்களுக்கான சேவைகளை மக்கள் நீதி மய்யம் மக்களுக்காக செய்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

“கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது. நான் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மார்ச் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.

தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும். – கமல் ஹாசன், தலைவர்

“கிராமங்களில் கிராம சபைக்கான குரலாக; நகர்ப்புறங்களில் ஏரியா சபைக்கான குரலாக;
ஒட்டுமொத்தமாக உள்ளாட்சிக்கான குரலாக..
மநீம இனியும் தொடர்ந்து ஒலிக்கும்.
12ஆண்டுகளுக்கு முன் வந்த சட்டமானது அமல்படுத்தப்படாத நிலையில்,
ஏரியா சபை அமைக்கக்கோரி உரத்த குரல்கொடுத்த ஒரே அரசியல் தலைவர் நம்மவரே !

இத்தகைய சிறப்பான ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் அவருடன் இணைந்து இயங்கும் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு A.G.மௌரியா, மாநில செயலாளர்கள் திரு சிவ இளங்கோ மற்றும் திரு செந்தில் ஆறுமுகம் மற்றும் உடன் துணை நின்ற மாநில செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவர்க்கும் தமது உள்ளார்ந்த நன்றியை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.