ஆகஸ்ட் 15, 2௦23

கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களால் உரக்க பேசப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு மனுக்கள் அளித்து அதனை நடைபெறச் செய்தார். இதற்காக உடனிருந்த மாநில செயலாளர்கள் அனைவரின் முயற்சிகளும் கை கொடுத்தது என்றே சொல்லலாம். கடந்த 2௦21 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் குறிப்பிட்டுள்ள நாட்களில் கிராமசபைகள் நடைபெற உத்தரவிடப்பட்டு அதன்படி நடந்தும் வருகிறது. வருடத்தில் நான்கு நாட்கள் என்பதை கடந்து கூடுதலாக இரண்டு நாட்கள் நடைபெறலாம் என அரசு அனுமதித்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

அதன்படி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 ஆன இன்று தமிழகம் முழுதும் கிராம சபைகள் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பாக துணைத்தலைவர்கள், மாநில செயலளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலரும் அவரவர் ஊர்களில் நடந்த கிராம சபைகளில் கலந்து கொண்டனர்.