சென்னை ஏப்ரல் 25, 2022
ஒரு நாடோ அதில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பது வேண்டும் தான். அப்படி வரும் வளர்ச்சி சுற்றுப்புறத்தையும் அங்குள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் குலைக்குமாறு இருப்பின் அந்த வளர்ச்சியினால் ஒரு பயனும் இல்லை அதில் வரும் வருவாயும் வரிகளும் பயனற்றவை ஆகும்.
மண் வளமும் மாசு படாமல் காற்றும் மாசடையாமல் நீர் களங்கமில்லாமல் ஒரு தொழிற்சாலை இயங்கும் என்றால் அது சாத்தியம் இல்லை ஆனால் அதிலும் வரையறைக்கபட்ட நிபந்தனைகள் கொண்ட அளவுகோளுடன் கூடிய கண்காணிப்புகள் மற்றும் அங்கு உண்டாகும் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு சுற்றிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை உருக்குலைக்காமல் தொழிற்சாலைகள் இயங்குவதை சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து எந்த சமரசமும் இன்றி கண்காணிப்பதும் அப்படி அந்த தொழிற்சாலைகள் விதிகளை மீறும்பட்சத்தில் அவர்களின் உரிமங்களை அல்லது அனுமதிகளை சட்டதிற்கு உட்பட்டு தணிக்கை செய்தும் தகுந்த விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியும் அதிலும் முறையான தகுந்த விபரங்கள் இல்லாமல் போனால் மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படவேண்டும்.
சென்னை மணலி பகுதியில் சடையன்குப்பம் பர்மா நகர் எனுமிடத்தில் தனியார் இரும்புத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் அத்தொழிற்சாலையின் அருகில் இருளர் சமூகத்தை சார்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
மேலும் அந்த இரும்பு உருக்காலையின் புகைபோக்கிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான புகையினால் அப்பகுதியின் காற்றுகளில் மாசுகள் உண்டாவதும் அப்புகையால் அங்கு அருகினில் வசிக்கும் பொதுமக்களாகிய எங்களுக்கு சுவாசத்தில் பிரச்சினைகள் உண்டாவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த ஆண்டில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்ததை தொடர்ந்து அதற்காக தமிழக அரசு தந்த பதில் : நாங்கள் அந்த இரும்பு உருக்காலையில் ஆய்வு செய்தபோது அங்கே உலோக கழிவுகளை கொட்டும்போது தான் சற்று அதிகமாக புகை வெளியாகிறது என்றும் தெரிவித்தனர்.
இந்தப்பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது யாதெனில் வெளியாகும் அதிகப்படியான புகையினால் ஆலைக்குச் சுற்றுபுரத்திலுள்ள மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படத் துவங்கியுள்ளது. இது இன்னும் பெரிதாகி மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் எனவே தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதனை கருத்தில்கொண்டு உடனடியாக ஆய்வினை மேற்கொண்டு அந்த இடத்தின் காற்றின் தன்மையை அங்கிருக்கும் மக்களின் கருத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.
மக்கள் நீதி மய்யம் என்றைக்கும் வளர்ச்சிக்கு முன்னேற்றப்பாதை இருப்பதை வரவேற்கும் அரசியல் கட்சியாகும் ஆயினும் அந்த வளர்ச்சி அதனால் வரும் முன்னேற்றம் மக்களின் நலன் சார்ந்தே இருக்க வேண்டும் எனும் கொள்கையை மாற்றிக்கொள்ளாது. எனவே இதில் தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறைகளில் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் காற்றில் வெளியாகும் புகையின் மாசுபடும் தன்மையை ஆராய்ந்து அதில் உயிர்கொல்லியான நச்சுத்தன்மை இருக்கிறதா என்றும் கவனமாக மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது. மக்களின் நலன் மீறிய எதுவும் வளர்ச்சிக்கான பாதையாக எடுத்துகொள்ள முடியாது.
சென்னை, ஜூலை 4 2022
மேற்கண்ட கட்டுரையில் மணல பகுதியில் உள்ள தொழிற்சாலை உருவாக்கும் மாசுகளை பற்றி ஆய்வு செய்து அரசிடம் சமர்பித்து அதனை மாசுக்கட்டுப்பாடு துறையும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ஆலைக்குச் செல்லும் மின்சார இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கான கட்சி என்பதை உறுதி செய்துள்ளது ம.நீ.ம
“சூழலுக்கும், சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த மணலி தனியார் இரும்பு தொழிற்சாலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் 25.04.2022 அன்று கோரிக்கை விடுத்திருந்தது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு, முதல்வர் தனிப்பிரிவில் மனு, கள ஆய்வு என மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளால் தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. தற்போது, விதிமீறல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அந்தத் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மூடுவதற்கான வழிமுறைகளும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழலை மாசுபடுத்தாமல் தொழில்கள் வளர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.”