சென்னை ஆகஸ்ட் 30, 2022

ஒவ்வொரு சிறப்பு நாட்களில் மட்டும் உறையாற்றும் நம் பிரதமர் முக்கிய செய்தி ஏதேனும் சிலவற்றை சொல்லிச் செல்வார். செய்தித் தாள்கள் செய்தி தொலைக்காட்சிகள் பரபரப்பாக கொஞ்ச நாளைக்கு அதையே ஒளிபரப்பி வரும். நாளடைவில் அது மறந்து போகும்.

பெட்ரோல் விலை சமையல் எரிவாயு விலை சரியும் இந்திய ரூபாய் மதிப்பு பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம் அத்தியாவசியப் பொருட்களின் மீது விலையேற்றம் மற்றும் ஊசி முதல் ராக்கெட் வரை ஜி எஸ் டி விதிப்புகள் இப்படி பட்டியல் பெரிதாய் நீளும்.

இப்போது ஊழல் ஒழிப்பை கையில் எடுத்துக் கொண்டு 75 ஆவது சுதந்திர தின செய்தியாக நாடு முழுதும் பேசியிருக்கிறார் மாண்புமிகு பிரதமர் அவர்கள்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆளும் பிஜேபி அரசின் கல்வி அமைச்சர் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பிரதமர்.

கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்.

ஊழல் ஒழிப்பில் பாஜகவின் இரட்டைவேடம்!.
ஊழல் ஒழிப்பு என்பது சுதந்திரதின உரைக்கு மட்டும்தானா?.
பிரதமர், பாஜகவுக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி!. – ம. நீ. ம வின் மாநில செயலாளர் அறிக்கை.