சென்னை ஆகஸ்ட் 10, 2022

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை எதிர்கொண்டனர்.

நடைபெற்ற போட்டிகளில் நமது நாட்டின் பல வீரர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு! பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு. மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, வெளிநாட்டவரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதேபோல, தனிநபர் பிரிவில் தங்கம் வென்று, சாதனை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷுக்கு வாழ்த்துகள். மேலும், தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

தொடர்ந்து சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் வென்று, தேசத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டுமென வாழ்த்துகிறோம். – மக்கள் நீதி மய்யம்