நாங்குநேரி, ஆகஸ்ட் 31, 2022

கல்வி பயில பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியரை கழிவறைகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது முற்றிலும் கொடுஞ்செயல். கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்ட விதி ஆகும். ஆனால் பெரும்பாலான காலங்களில் இதுபோல் சில பள்ளிகளில் மாணவ மாணவியரை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்துவது குற்றமாகும். இதை எந்த பள்ளியிலும் ஊக்குவிக்கப்படக்கூடாது. கைகளில் நோட்டுப் புத்தகங்களும் பேனாக்களும் பென்சில்களும் பிடிக்க வேண்டியதை தவிர்த்து துப்புரவு செய்யும் உபகரணங்களை தருவது தகாத செயலாக கருதப்படும். விரைவில் இதுபோன்று காரியங்களில் ஈடுபடும் பள்ளியின் ஆசிரியர்களோ அல்லது பணியில் இருக்கும் துப்புரவு பணியாளர்களோ மாணவர்களை ஈடுபடுத்துகிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோல் எந்த பள்ளிகளும் அனுமதிக்கப்படக்கூடாது. நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில் இதுபோன்ற துப்புரவு பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தியமைக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. அரசு பள்ளிகளில் பலவற்றில் சரியான கழிப்பிட வசதிகள் இல்லாமலும் ஆய்வுக்கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியன இல்லாமலும் வகுப்பறைகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாமலும் எண்ணற்ற மாணவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள்

“நெல்லை, நாங்குநேரி அரசுப் பள்ளியில்
துப்புரவுப் பணியில் ஈடுபட்ட மாணவிகள்! அரசின் உத்தரவுகள்
காற்றில் பறக்க விடப்படுகிறதா ?

மக்கள் நீதி மய்யம் கண்டனம்

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

மேலும், பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம், கழிப்பறை வசதி இல்லை, சுற்றிலும் செடி, புதர்கள் சூழ்ந்திருப்பதால் வகுப்புக்குள் பாம்புகள் நுழைகின்றன என்றெல்லாம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல, தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.

கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி பள்ளி சிறு உதாரணம்தான். எனவே, பணியாளர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். – மக்கள் நீதி மய்யம்

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/mnm-says-nanguneri-school-incident-as-an-example-of-the-situation-in-government-schools-473468.html

https://www.toptamilnews.com/amp/thamizhagam/Schoolgirls-doing-cleaning-work-in-schools-Government-order/cid8411339.htm