சென்னை, ஆகஸ்ட் 31, 2022

சென்னையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் சுமார் 10 மாதங்களாக போதுமான ஊழியர்கள் இல்லாமலும் நிதியும் ஒதுக்கப்படாமலும் பெரும் சிரமத்தில் இருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அனுப்பப்பட்ட ஆறு ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். 2021ல் செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் பட்டியலினும் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதல் அனைத்து வசதிகளையும் மற்றும் அவர்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பையும் தொடர்ந்து அளிக்கும் என உறுதி கூறினார்.

ஆணையத்தில் உள்ள முக்கியமான நிதி, மனித வளம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் சட்டம் ஆகிய நான்கு துறைகளிலும் ஊழியர்களை நியமிக்க வேண்டிய கோப்புகள் பல துறைகளிலும் மேற்கொண்டு எந்த அடுத்த கட்ட முன்னேற்றமும் இல்லாமலும் கிடப்பில் உள்ளது.

தினசரி நடவடிக்கைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்படாமல் தாட்கோ விடமிருந்து எழுது பொருட்கள் முதலானவற்றை கூட எதிர்பார்க்க வேண்டி இருப்பதாகவும் இந்த ஆணையம் இருப்பதாக அறியப்படுகிறது.

அருந்ததியர் சமூகத்தின் பிரதிநிதியாக உறுப்பினரை நியமனம் செய்யவும் இந்த ஆணையம் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறதாக அறியப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதி அரசர் டி ஆர் சிவகுமார் தலைமையிலான ஐந்து நபர் கொண்ட கமிஷனில் இந்த நியமனம் செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களிடமிருந்தும் சுமார் 1100 மனுக்கள் பெறப்பட்டது அதில் சாதிய வேறுபாடு பார்ப்பதும் நிலம் தொடர்பான சிக்கல்களையும் பல அடக்குமுறைகளையும் சரி செய்யுமாறு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தினசரி பத்து மனுக்கள் வரையும் அதன் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கையூட்டு கேட்பதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

மேலும் இந்த ஆணையம் சிரமம் இல்லாமல் தினமும் தொடர்ந்து சரியாக செயல்பட தேவையான 80 தகுதியான ஊழியர்களை நியமிக்க அரசால் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அதை அதை 50 ஊழியர்களாக குறைக்கப்பட்டுள்ளது அதையும் இன்னும் தகுதி தேர்வுகளை வைத்து முறையாக தேர்வு செய்யப்படாதது வருத்தத்தை அளிக்கிறது.

இதைப் பற்றி தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறை அமைச்சரான திருமதி N கயல்விழி அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு “போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் உள்ள இந்த ஆணையத்திற்கு விரைவில் தகுதியான ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அதுவரை தாட்கோவில் இருந்து ஊழியர்கள் மூலம் இந்த ஆணையம் செயல்படும்” என்று கூறினார்கள். மேலும் நீதிமன்றம் மற்றும் தேவையான அளவிற்கு இடவசதி ஆகிய கட்டமைப்புகளுடன் கூடிய புதிய வளாகத்திற்கு ஆணையம் இடமாற்றம் செய்யப்பட விருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நன்றி : திரு.பாலாஜி ஆறுமுகம் & TOI