சென்னை – செப்டெம்பர் 26, 2022
விண்ணில் ராக்கெட்டுகள் விடப்படுகின்றன, செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமாவென ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருப்பதும், நாட்டின் எல்லைப்புற கோடுகளில் அதனூடாக ஊர்ந்து கால் கடுக்க நின்று நம் தேசம் காக்கும் வீரர்கள் யாரும் இனமோ மதமோ சாதியோ பார்த்து நிற்பதில்லை. வீசும் காற்றும், ஒளிரும் சூரியனும், பொழியும் மழையும் என எதுவும் சாதி பார்த்து தன் பணிகளை இடைவிடாமல் செய்யத் தவறவில்லை.
கல்விச்சாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு அன்பும், அரவணைப்பும், நல்லொழுக்கமும், சாதி மதங்கள் கூடாது என எடுத்துச் சொல்லி அனைவரும் சமம் என போதிக்க வேண்டிய ஆசிரியர்களைக் கொண்டு வர்ணாசிரமம் பற்றி பாடம் எடுத்து போதிக்கச் சொல்வது நம் மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையை பிளவுபடச் செய்வதாகும். அதிலும் இளமையில் கல் என்பதை தவறாமல் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படி பிற்போக்குத்தனம் கொண்ட பேதம் கொள்ள வைக்கும் ஓர் பாடத்தை 6 ஆம் வகுப்பிலேயே நுழைத்து நஞ்சைக் கலப்பது எங்கனம் முறையாகும்.
கட்சி துவங்குவதற்கு முன்பும் ஓர் புகழ்பெற்ற நடிகராக இருந்த போதும் தன்னலம் மட்டுமே கொள்ளாமல் நற்பணி இயக்கம் அமைத்து எந்த மதமும் எந்த சாதியையும் கொண்டு கலக்காமல் அனைவருக்கும் பொதுவான ஓர் நற்பணி இயக்கமாக செயல்பட வைத்துக்கொண்டிருந்த நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் துவக்கும் போதே தெளிவான ஓர் முடிவினை எடுத்துக் கொண்டார் அது சாதி மதம் இனம் மொழி என எந்த பாகுபாடுகளும் கட்சியின் எந்த பகுதியிலும் பார்க்கக்கூடாது என்பதே திட்டவட்டமான முடிவு. அரசியல் சாசன சட்டங்களுக்கு விதிகளுக்கு உட்பட்டே ஜனநாயக ரீதியான ஓர் கட்சியாகவே செயல்படும் என்றும் தெளிவாக அறிவித்தார். மக்களின் மாண்பையும் நலனையும் கெடுக்கும் எதுவும் மய்யத்திற்குள் கொண்டு வரக்கூடாது எனவும் உரைத்து நின்றார். இப்படி ஓர் தலைவனின் வழியே பின்தொடரும் ஒவ்வொரு தொண்டனும் அவர் சொல்படியே எந்தவித பேதமும் இன்றி ஒருவருக்கொருவர் ஒரே குடும்பமாக விளங்கி வருகிறார்கள் என்றால் மிகையாகாது.
மாணவர் பருவம் என்பது கேட்பதை, காண்பதை, பயில்வதை சட்டென உள்வாங்கி புத்தியில் இருத்திக் கொள்ளும் திறனுடையது அப்படி கற்பூரம் போல் விரைவில் புரிந்து கொள்ளும் வயதில் இப்படி வர்ணாசிரம கல்விக் கொள்கையை புகுத்தி வைத்தால் வளரும் தலைமுறைகளும் இனி வரவிருக்கும் தலைமுறைகளும் சாதிகளும் பேதங்களும் கொண்டல்லவா உலவுவார்கள் ?
மக்கள் நீதி மய்யம் என்றும் எப்போதும் இந்த வர்ணாசிரம கல்வி கொள்கையை எந்த வகுப்பிலும் எத்தகைய பாடத்திலும் புகுத்தக் கூடாதென திட்டவட்டமாக கூறிக் கொள்கிறது.
“மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.
அப்பாடத்தில் இடம்பெற்றுள்ள படங்கள் வேதனையை திகரிக்கின்றன. “வர்ணாசிரம முறை” என்ற தலைப்பிலான அந்தப் பாடத்தில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொருவருக்குமான வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த கேள்விகளும் உள்ளன.
பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. பேதமற்ற சமுதாயம் அவசியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியில், மனிதர்களிடம் சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது.
உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.” – மக்கள் நீதி மய்யம்
(26.09.2022 தேதியிட்ட அறிக்கை அடுத்து வரும் ஆங்கில வடிவமும் உங்களின் பார்வைக்கு)
The Varnasrama reference in Class 6 CBSE curriculum just goes to show how the Centre is sowing the seeds of caste discrimination in young minds. The illustrations in the said lesson are disheartening.
The Chapter titled Varnasrama, not only explains the retrograde division of humans into Brahmins, shatriyas, Vysyas & Sudras but also teaches discrimination through assigned professions for each. This is nothing but instilling divisive social structure in young minds.
While the need is to develop thoughts of social equality, CBSE focuses on teaching discrimination. Makkal Needhi Maiam strongly condemns this & urges the Central Government & CBSE to remove the said lesson from the curriculum.
Read more: சாதி எனும் விஷத்தை பரப்பும் வர்ணாசிரமம் குறித்த பாடம் – அதுவும் 6 ஆம் வகுப்பிலேயே