கன்னியாகுமரி – செப்டம்பர் 23, 2022

நம்மவர் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம், கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு) சார்பாக வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு துவங்க உள்ளது மாபெரும் இலவச பொது மருத்துவ சிறப்பு முகாம். அருகிவிளை பகுதியில் அமைந்துள்ள

நற்பணி இயக்கம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நம்மவரின் ரசிகர்கள் இரத்த தானம், கண் தானம், உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் ஆகியனவற்றை செய்து வருகிறார்கள். அரசியல் இயக்கமாக மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்ட பின் இன்னும் முழு உத்வேகத்துடன் கூடுதல் பொறுப்பு மற்றும் பலத்துடன் மருத்துவ சிகிச்சை பரிந்துரை செய்யும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு முகாம்கள் அனைத்தும் கைதேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் வந்திருந்து முறையாக சிகிச்சைகளை அளித்து மற்றும் பரிந்துரை செய்து வருகிறார்கள் முற்றிலும் இலவசமாக செய்து வருகிறார்கள். இத்தகைய மருத்துவ சிறப்பு முகாம் ஒவ்வொன்றையும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல அணிகளை உள்ளடக்கிய நிர்வாகிகள் ஒத்துழைப்போடு செய்து முடிக்கிறார்கள்.

எந்த பிரதிபலனும் இல்லாமல் இல்லங்களில் தம்முடன் இருக்கும் ஓர் மூத்த குடிமகனாக அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாக திகழும் நம்மவர் செவாலியே, பத்மஶ்ரீ பத்மபூஷன் உலகநாயகன், அரசியலின் பரிணாம வளர்ச்சியில் பங்களிக்க தூய எண்ணமும் விரிவான பார்வை கொண்ட தலைவரை மிக உயரத்தில் வைத்துள்ளது நம்மவரின் நம்மவர்கள் செய்து முடிக்கும் மேற்காணும் மருத்துவ முகாம்கள்.

மக்களுக்காக மக்களால் களத்தில் நிற்கும் மக்கள் நீதி மய்யம்.

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து அதனை சிறப்பாக நடக்க செய்திடும் மாவட்ட செயலாளர் உட்பட உடன் இணைந்து உழைக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது மய்யத் தமிழர்கள்.காம் / https://maiatamizhargal.com

அனைத்திற்கும் மேலாக நற்பணிகள் செய்யுமாறு தூண்டுகோலாக திகழும் நமது மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றி !