கோவை, செப்டெம்பர் 17, 2022

மக்கள் நீதி மய்யம் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை துவங்கிய போதிருந்தே முன்னணியில் வந்து கொண்டிருந்த நம்மவர் அவர்கள் இறுதிகட்ட சுற்றில் வெற்றியடைந்ததாக கருத முற்படும் போது திடீரென இரவு 9 மணிக்கு மேல் சுமார் 1723 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி வேட்பாளர் ஆன வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இந்த போலியான வெற்றி அறத்திற்கு எதிரானது என தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுதும் தெளிவாக தெரிந்தது. சூழ்ச்சியின் காரணமாக தோல்வியை அடைந்த தலைவர் அதற்கென ஒருபோதும் கலங்கிட வில்லை. ஆட்சியும் அதிகாரமும் மட்டுமே மக்களுக்கான பணியை செய்திட அவசியம் அல்ல என்பதை ஒவ்வொரு நற்பணியும் சொல்லும்.

  1. பாறைகளாக இருந்த பாதையை செப்பனிட்டு படிக்கட்டுகளாக மாற்றித் தந்தது.
  2. இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்
  3. போதிய நிதியின்றி சிரமம் அடைந்த பளு தூக்கும் வீரருக்கு (திரு பத்மநாதன்) உதவி புரிந்த நிகழ்வு
  4. புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டு காப்பாற்றிய சிங்காநல்லூர் மய்யம் நிர்வாகி திரு பார்த்தசாரதி
  5. கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு காற்றின் மூலம் தூய குடிநீர் உற்பத்தி செய்யும் RO கருவி வழங்கப்பட்டது.
  6. மக்கள் நீதி மய்யம் மகளிர் விருது வழங்கும் விழா

இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். மக்களுக்காக மக்களின் மனநிலையில் அவர்களினூடே பயணிக்கும் கமல் ஹாசன் அவர்கள் கோவை சுற்றுப்பயணத்தில் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொதுமக்களுடன், மாணவிகளுடன் உரையாற்றினார்.

அவர் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதிக்கு சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை, குறைகளை, நிறைகளை அவர்களின் மூலமாகவே கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு இயன்றதை செய்ய முயல்வதாகவும் அரசு இயந்திரங்களின் துணையுடன் சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவண செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேடையில் பேசும் போது அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் நீங்கள் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என ஆசைப்படுவதாக சொன்னதும் அதற்கு தலைவர் அவர்கள் “நான் இப்போது அதற்காக வரவில்லை இப்பகுதி மக்களுக்கு கழிவறைகள் கட்டித்தர மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது அதற்கான பணிகளைத் துவக்கி அதை விரைவில் முடித்துத்தர களத்தில் இறங்கியுள்ளோம். அப்படி அந்தக் கழிவறைகள் கட்டப்பட்ட பின் அவற்றை உபயோகத்திற்கு செய்யும்போது அவற்றை தூய்மையாக பராமரித்துக் கொள்ள வேண்டும், அப்படி நீங்கள் சரிவரப் பராமரிக்க வில்லை எனில் அதனைத் தூய்மைப் படுத்தும் பணியில் நானே இறங்குவேன் அதற்காக அச்சம் கொள்ளவோ வெட்கம் கொள்ளவோ மாட்டேன்” என்று கூறினார்.

வெற்றி மட்டுமே ஓர் தலைவனை அவரை தொடரும் தொண்டர்களை அடுத்தடுத்த மக்களுக்கான அரசியல் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு விடாது. தோல்வியுற்றாலும் களத்தில் நின்று மீண்டும் போராடத் துவங்கும் எண்ணம் வந்தாலே அதுவே வெற்றியாகும்.

மக்கள் நீதி மய்யம் 100/100 மக்களுக்கானது.

https://twitter.com/maiamofficialna/status/1571127884374282241?t=vE9k-27fhq8oWzhcWuK95g&s=19
https://twitter.com/maiamofficialna/status/1570466521373081608?t=3LDvspEK5ZdwvTaXXqNHsQ&s=19
https://twitter.com/MNMsolinganalur/status/1571137338914525185?t=3GnA4oNsGEwYZaVbnIvMeA&s=19
https://twitter.com/rnrajesh23/status/1571348089268752386?t=r-WJJSvm9zdgBnlf_y7bTw&s=19