கோவை, செப், 18 – 2022

தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் நேற்று (17 செப்டம்பர் 2022) மக்கள் நீதி மய்யம் சார்பாக 20 பெண்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கி உரையாற்றிய போது ;

விவசாயம் மற்றும் அதனை நம்பியுள்ள விவசாயிகளை காப்பது நம் அனைவரின் கடமை. எனவே மக்கள் நீதி மய்யம் இனி கிராமத்தை நோக்கி பயணப்படும்.

விவசாயிகளை சாகடித்து விட்டு நாம் சாப்பிட முடியுமா ? விவசாயத்தை காக்க வேண்டும் கிராமத்தை மேம்படுத்த வேண்டும் எனவே மக்கள் நீதி மய்யம் கிராமங்கள் நோக்கி செல்லும்.

மாற்றத்தை ஏற்படுத்த வயது பதவி போன்றவைகள் தேவையில்லை. இவ்வுலகில் மாற்றத்தை ஏற்படுத்தியது சாமானியர்கள் தான்.

மாற்றம் நம்மிலிருந்து உருவாக வேண்டும் இங்கு இருக்கும் அனைவருமே மாற்றத்தின் விதையாக மாற முடியும்.

வீரத்தின் உச்ச கட்டம் அஹிம்சை தான்.