திருப்பூர், செப்டம்பர் 20 – 2022

கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரில் அந்த ஊராட்சியில் மின்மோட்டார் இயக்குனராக பணியாற்றி வரும் திரு.ராயப்பன் அவர்கள் கிராம சபை கூட்டத்திலே மக்கள் முன்னிலையில் கணியாம் பூண்டி ஊராட்சி தலைவர் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மீது கமிஷன் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களுக்கும் பங்கு வழங்கவே தான் பணம் கேட்டதாகவும் பகிரங்கமாகவே கிராமமக்கள் முன்னிலையில் தெரிவித்தார். திரு.ராயப்பன் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சபையில் கலந்து கொண்ட கிராம மக்களின் ஒருமித்த கருத்தால் அந்த குற்றச்சாட்டை விசாரிக்க தனி விசாரணை அலுவலர் நியமனம் செய்து இப்புகாருக்கு தீர்வுகாணவேண்டும் கிராம சபையில் தீர்மானம் இயற்றப்பட்டது மக்களின் முன்னால் இயற்றப்பட்ட இந்த தீர்மானம் ஒரு வருட காலமாகியும் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதுநாள் வரையில் இந்த தீர்மானத்துக்கு தீர்வோ !? நடவடிக்கையோ !? எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 15 2022 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் இது குறித்து மக்கள் கருத்துக்கள் கேட்டபோதும் ஊராட்சியின் சார்பாக முறையான பதில் அளிக்கப்படவில்லை.

தீர்மானம் மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை சுமார் ஒரு வருட காலம் ஆகியும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நீதி மய்யம் சார்பில் வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.