கோவை, செப்டெம்பர் 20 – 2022

மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் சாதனையாளர் விருதுகள் 2022 விழா தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபற்றது. தேர்வு செய்யப்பட்ட 20 மகளிர் சாதனையாளர்களுக்கு விருதுகள் அவர் செய்த அளப்பரிய பணிகளை வைத்து அவரவர் துறை சார்ந்த மாண்புடன் வழங்கப்பட்டு கெளரவிக்கபட்டார்கள்.

விருதுகள் பெற்றுக்கொண்ட மகளிர் சாதனையாளர் பற்றிய விபரங்களை உங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

CULTURAL EXCELLENCE விருது பெற்ற சாதனையாளர் ஆயிஷா பாத்திமா

DREAM BUILDER விருது பெற்ற சாதனையாளர் செல்வி

EVER GREEN ENTERPRENUER விருது பெற்ற சாதனையாளர் விஜயலட்சுமி சிவக்குமார்

RED CRUSADER விருது பெற்ற சாதனையாளர் ஷர்மிளா

தலைவர் நம்மவர் திரு கமல் ஹாசன் விருதுகள் பெற்ற சாதனையாளர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது மக்கள் நீதி மய்யம்.

விருதுகள் என்பது வெறும் மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல இதுவரை செய்த சாதனைகளுக்கு பாராட்டாக இனி செய்யவிருக்கும் சாதனைகளுக்கு ஓர் உத்வேகமாக தூண்டுகோலாக அமையும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. சாதிக்கப் பிறந்தவர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் சரித்திரம் படைப்பதற்கு அச்சாரம்.

சாதனைகளைப் புரிந்து விருதுகளை வென்றெடுத்த பெண்மணிகளுக்கு மற்றும் விருதுகளை வழங்கிய மக்கள் நீதி மய்யம் ஆகியோர்களுக்கு மய்யத்தமிழர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.