சென்னை, செப்டம்பர் 10, 2022

தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாலும், மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் செய்யும் ட்ரான்ஸ்பார்மர்கள், சர்கியூட்கள் பல மராமத்து செய்ய வேண்டியும் இருக்கக் கூடும் என்று அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம் மக்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்தது என்றும் அறிவித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இது குறித்து விரைவில் மக்களிடையே கருத்துக் கேட்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தவிருப்பதாக அறிவித்தார். பின்னர், முறையே ஆகஸ்ட் 16 ஆம் தேதி கோவையிலும், 18 ஆம் தேதி மதுரையிலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே சென்னையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஏற்பாட்டில் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் ஒருமித்தமாக கட்டண உயர்வினை மேற்கொண்டால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு மின்கட்டணத்தை உயர்த்தாமல் வேறு மாற்று வழிகளில் மின்சார துறையில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை சீர் செய்ய இயலுமா என்றும் ஆலோசனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

எனினும் திமுக வின் தேர்தல் பரப்புரையில் கொரொனோ பெருந்தொற்றின் தாக்கத்தால் நலிந்துபோன மக்களின் பொருளாதார சிக்கல்கள் சீராகும் வரையில் மின் கட்டண உயர்வில் இந்த அரசு பரிந்துரை செய்யாது கட்டணத்தில் உயர்வு என்பது இருக்காது என்றும் சொல்லி இருந்தார்கள். ஆனால் அவையெல்லாம் காற்றில் கரைந்தே போயின.

வாரி வாரி வழங்கிய வாக்குறுதிகள் யாவும் முகம் துடைத்து வீசி எறியப்படும் டிஷூயு பேப்பர் போன்றே தோன்றுகிறது. வாக்குகள் கேட்கும்போது பம்முவதும் பணிவதும் வாக்குகள் வாங்கிய பின்னர் பாய்வதும் வழக்கமாக கொண்டுள்ள காட்சிகளுக்கு மத்தியில் திமுக என்றும் சற்றே வித்தியாசமான அரசியல் கட்சி தான் ஏன் என்றால் இவர்கள் நல்ல திட்டங்களை விட மக்களுக்கு அதிர்ச்சியை அள்ளித்தரும் இது போன்ற திக் திக் திட்டங்களை அவ்வப்போது அள்ளித் தருவதில் வித்தியாசமான அரசியல் கட்சி தானே ?

“பொதுமக்கள், சிறு, குறுந் தொழில் துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மின் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.”

2026-27 வரை இக்கட்டண உயர்வு அமலில் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பெயரளவுக்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துள்ளனர்.

ஏற்கெனவே, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் தினசரி வாழ்வையே நகர்த்த முடியாமல் திணறும் மக்களை மின் கட்டண உயர்வு நிலைகுலையச் செய்துள்ளது. மின் வாரியத்தில் ஊழல், முறைகேடுகளைத் தடுத்து, நிர்வாகச் சீரமைப்பு மூலம் நிதிநிலையைச் சரிசெய்யாமல், கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றுவது அநீதி. உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதுடன், மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு,கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.” – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

மக்கள் நீதி மய்யத்தின் கண்டனம் – ஆங்கில வடிவத்தில்

The Government of Tamil Nadu has implemented the hike in electricity tariff regardless of the opposition from the public, small scale and Micro Industries and the political parties. This is strongly condemned.

According to the Electricity Board, this tariff hike will be effective till 2026-2027. Ignoring the opposition, the Government of Tamil Nadu has given a shock to the people by holding a namesake meeting and have hiked the fares drastically.

The people are already struggling with a rise in the price of fuel and essential commodities. This hike can will further worsen the demands of daily life. Without preventing corruption and malpractices in the electricity board and fixing the financial situation through administrative reforms, it is unfair to burden the people to share the debt and pay for it. Along with withdrawing the increase in electricity tariff immediately, the system of calculating electricity consumption every month should be implemented.

https://www.hindutamil.in/news/tamilnadu/846498-electricity-tariff-hike.html

https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/aug/22/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3902565.html

https://tamil.economictimes.com/news/general/tamilnadu-electricity-fare-hiked-from-today-september-10-2022/articleshow/94111987.cms

மின்சார கட்டண உயர்வை அமல்படுத்த முடிவுகள் செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் செய்தது பற்றி நமது மய்யத்தமிழர்கள் இணையதளத்தில் வெளியான செய்தித் தொகுப்பு கீழே :