சென்னை, செப்டெம்பர் 30 – 2022

உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

கம்போடியா நாட்டில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை முன்னிட்டு, ஷியாம் ரீப் நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகப் பொதுமறையை எழுதிய வள்ளுவரின் புகழ் பாரெங்கும் பட்டொளி வீசிப் பறப்பது தமிழினத்திற்குப் பெருமிதம். வான்புகழ் கொண்ட வள்ளுவருக்குப் பெருமை சேர்த்த அங்கோர் தமிழ்ச் சங்கம், சிலை வழங்கிய விஜிபி உலகத் தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், துணைநின்ற கம்போடியா அரசின் கலை, பண்பாட்டுத் துறையினருக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. – மக்கள் நீதி மய்யம்