கோவை – அக்டோபர் 12, 2022
கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார்.
உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் போதுமான அளவிற்கு கழிவறை வசதிகள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் அப்பகுதிவாசிகள். எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த சிக்கல் எந்த கழகங்களும் தீர்த்து வைக்கவில்லை.
எனவே இவற்றை எல்லாம் அறிந்த தலைவர் அவர்கள் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தன் சொந்த செலவில் 4 கழிவறைகளை கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தலைமையில் கழிவறைகளை கட்டித் தர தகுந்த இடத்தினை ஒதுக்கித் தருமாறு மாநகர மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
http://getlokalapp.com/share/videos/7791130?utm_source=video_link&utm_v=pdd_video_link_share&utm_district_id=479