மய்யம் என்றால் என்ன??
உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.
மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில அரசியல்வாதிகள், மக்கள் இக்கொள்கையை புரிந்துக்கொண்டால் மாற்றத்தை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில், “எப்படி ஒரு மனிதனால் மய்யத்தில் இருக்க முடியும்? ஏதேனும் ஒரு பக்கம்/நிலைபாடு எடுத்தே ஆக வேண்டுமே!! எனவே, இம்மாதிரி கொள்கை நமக்கு ஒத்து வராது” , என்றெல்லாம் சொல்லி சொல்லி, மக்களை ஒரு வித குழப்பத்திலேயே வைத்திருக்கின்றனர்.
இந்த குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை.
மய்யம் என்பது வெளிநாட்டு கொள்கை கிடையாது. அனைத்திற்கும் முன்னோடிகளான தமிழர்களே!! இதற்கும் முன்னோடி. நம் தமிழ் மண்ணின் வள்ளுவர் 2050 ஆண்டுகளுக்கு முன்னரே செங்கோண்மை (ஆட்சி தர்மம்) என்ற அதிகாரத்தில்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
என்ற குறளில், ஒரு அரசன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார்.
அதாவது, தன் ராஜ்ஜியத்தில் ஒரு குற்றம் நடந்தால், அக்குற்றத்தை அரசன் விசாரிக்க வேண்டும், எப்படி விசாரிக்க வேண்டுமாம் தெரியுமா ??
எப்பக்கமும் சாயாமல் விசாரிக்க வேண்டும். விசாரித்து, தக்க தீர்ப்பு வழங்க வேண்டும். இது தான் நீதி என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
அதாவது, மய்யம் என்ற நடுவுநிலைமையில் இருப்பது தான் நீதி.
அதுவே, மக்கள் நீதி மய்யம்.
இப்பொழுது சொல்லுங்கள், நடுவுநிலை என்பது நம் மண்ணிற்க்கு புதிதா ??
இல்லையே!!
நம் தமிழ் மன்னர்கள் அப்படித்தானே ஆட்சி செய்தார்கள். நீதி கேட்க வந்தது பசுவாயினும் , குற்றம் செய்தது தன்னுடைய மகனாகவே இருந்தாலும், விசாரனையும் தீர்ப்பும் மய்யத்தில் இருப்பதே நீதி.
மய்யம்(நடுவுநிலைமை) தான் நீதி.
அதுவே
மக்கள் நீதி மய்யம்.
- E. ப்ரிஸில்டா நான்சி
மாவட்ட பொறுப்பாளர்(சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்).
வடசென்னை மேற்கு.