சென்னை, நவம்பர் 11, 2௦22

கடந்த 1991 ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரசின் தலைவரும் முன்னாள் இந்திய பிரதமரும் ஆனா திரு ராஜீவ் காந்தி அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள அதே வருடம் மே மாதம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் வருகை தந்தார். அப்போது மனித வெடுகுண்டு மூலம் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் மேலும் அவருடன் சிலரும் கொல்லப்பட்டனர் மட்டுமல்லாது பொதுமக்களில் சிலரும் காவல்துறையினர் சிலரும் காயமுற்றனர். இது தொடர்பாக சிறப்புக்காவல் படைகளும், சிறப்புப் புலனாய்வுதுறை, சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் பலகட்டங்களாக விசாரணைகள் மேற்கொள்ளபட்டது. பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

1991 ஆம் ஆண்டிலிருந்து பல கட்டங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 31 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த 7 பேரில் AG பேரறிவாளன் என்பவர் இதே வருடம் கடந்த மே மாதம் 18 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி ஆணையின்படி 31 ஆண்டுகளுக்கு பின்னர் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு பின்னர் தொடர்ச்சியான சட்டரீதியான நகர்வுகளுக்கு பிறகு மீதமிருந்த 6 நபர்களான நளினி, சிரிஹரன் எனும் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் என்போர் இறுதியாக உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி விடுதலை செய்யப்பட்டனர்.

2௦18 ஆம்தமிழக அரசின் சட்டபேரவை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்தான சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஆனால் பல அரசியல் காரணங்களுக்காக விடுதலை செய்யப்படாமல் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது.

இதில் ஒரு மாநிலத்தின் அரசுக்கும் மற்றும் ஆளுநரின் வரம்புகள், அதிகாரம் பற்றிய பல சர்ச்சைகள் எப்போதும் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனவே அதே போன்று இந்த வழக்கிலும் ஆளுநரின் அலட்சியப்போக்கினால் சுமார் நான்கு வருடங்களாக விடுதலை தள்ளிப் போடப்பட்டு இறுதியாக உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் சாத்தியமாகி உள்ளது.

மாநில சுயாட்சி எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் மாநில அரசாட்சியில் ஆளுநரின் வரம்புகள் சரியாக தீர்மானிக்கப்படும்போது மட்டுமே ஏற்படும்.