சென்னை – நவம்பர் 11, 2௦22

சிலைகள் கடத்தல்கள் – மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன, அதுவும் பல ஆண்டுகளாக எந்தத் தெளிவான விடைகளும் இல்லாமல் தொடரும் பல கேள்விகள்.

மிகக்கச்சிதமான நெட் ஒர்கிங் வளர்ந்து நிற்கிறது. இதில் எந்த நியாயமும் தர்மமும் இல்லை என்பதும் பட்டவர்த்தனம். ஆண்டாண்டு கால உழைப்பை அதன் தொன்மையை சிறப்பை அனாயசமாக களவாடி பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும்படியாக அமைத்து வருகிறார்கள் இந்த சிலைகள் கடத்தலில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத மனிதர்கள்.

உதாரணமாக கடந்த 2௦19 ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள், மரச்சிலைகள், உலோகச் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1௦௦ க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு என்று பல புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கிறது.

கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் இந்த சட்டவிரோதமான குற்றங்களைச் செய்து கொண்டே இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அவர்களின் குற்றமும் கூடிக்கொண்டே போகிறது. விசாரணைகள் அதன் மூலம் கிடைக்கும் நிரூபணங்கள் வழியாக கொடுக்கப்படும் தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்று முடுக்கி விடுவதும் இனியும் இவ்வாறு நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும் இங்கே கட்டாயமாகிறது.

மீண்டும் சொல்ல வருவது இந்தச் சிலைகளை கலைப்பொருட்களை உருவாக்க தரும் கடின உழைப்பையும் நேரத்தையும் பொருளையும் செலவிடுவதையும் சுரண்டுவதும் தடுக்கப்படவில்லை என்றால் நமது ஆண்டாண்டு காலங்களாக தொடர்ந்து தொன்மையின் சிறப்பை இழப்பது வருத்தத்திற்குரியது.

இதுவரை சில காலங்களுக்கு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யாக பணிபுரிந்து வந்த திரு பொன்.மாணிக்கவேல் அவர்கள் பணி ஓய்வுபெற்ற பின்னர் சிலை கடத்தல் வழக்குகள் இன்னமும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளன என்று மனம் திறந்து ஊடகங்கள் முன்னர் பேசினார். இது தொடர்பாக வழக்குகளில் விலகாத மர்மம்! முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி. துணைத் தலைவர் திரு தங்கவேலு அறிக்கையின் வழியாக கேள்விகளை வைத்துள்ளார். இதற்கான விடைகளை எப்போது எப்படி யார் தருவார் ?

சிலை கடத்தலில் மர்மம்: பொன். மாணிக்கவேலின் கேள்விகளுக்கு பதில்? மநீம- Dinamani

கடந்த 2௦18 ஆண்டில் சிலைகள் கடத்தப்படுவது குறித்தும் வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு அணைத்து வழக்குகளையும் மாற்றியது ஒப்புக்கொள்ள உகந்தது அல்ல என்று கருத்தினை முன் வைத்தார்.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தவறு: கமல்ஹாசன் பேட்டி – Dinakaran

Idol kidnapping case : சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம் – மநீம கேள்வி!-makkal needhi maiam statement about idol kidnapping case – HT Tamil (hindustantimes.com)

சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம்! முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?! – Seithipunal

சிலை கடத்தலில் மர்மம்: பொன். மாணிக்கவேலின் கேள்விகளுக்கு பதில்? மநீம- Dinamani

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தவறு: கமல்ஹாசன் பேட்டி – Dinakaran

நன்றி : நியூஸ் 7 தொலைகாட்சி யூ டியூப்

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள்: விசாரணைக்குப் பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவு | All cases related to idol smuggling: High Court order to list for trial – hindutamil.in

சிலை கடத்தல் வழக்கு: கடவுளை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்ட சிறப்பு நீதி மன்றத்திற்கு உயர் நீதி மன்றம் கண்டனம். | Idol abduction case: High Court condemns special court for ordering God to appear in person. (asianetnews.com)