சென்னை டிசம்பர் 18, 2022

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பெயரில் பாரத் ஜோடோ யாத்திரையில் வரும் 24-ஆம் தேதி, தலைவர் கமல்ஹாசன் அவர்கள் டெல்லியில் கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அவருடன் பெருந்திரளாக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நோக்கிய சில முக்கிய முடிவுகளை தலைவர் நம்மவர் அவர்கள் தெரிவித்தார். மேலும் தேர்தல் வியூகம் & கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனையும் வழங்கினார். – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு மற்றும் வருகிற 2௦24 நாடாளுமன்றத் தேர்தலில் பங்குபெறுவது குறித்தான ஆலோசனைக் கூட்டமும் சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள தனியார் கருத்தரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அங்கே செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் அவர்கள் நிருபர்களின் பல கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதிலளித்தார். பின்னர் மிக முக்கிய முடிவாக தற்போது இந்தியா முழுக்க தேச ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கம் குறித்தான நடைபயணம் மேற்கொண்டு வரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களுடன் மக்கள் நீதி மய்யமும் அதன் தலைவரான தானும் நடைபயணம் மேற்கொள்ள விருப்பதாக அறிவித்தார். இம்மாதம் வரும் 24 ஆம் தேதி புதுதில்லியில் ராகுல்காந்தியுடன் இணைந்து நடை பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் கட்சியின் துணைத்தலைவர் அறிவித்தார்.

நாடு நல்லா இருக்கணும் எனும் எண்ணம் என்றும் தலைவருக்கு உண்டு என்பது இன்று நேற்றல்ல அவருடைய தந்தையார் தேசப்பற்றாளராகவும் சுதந்திர போராட்ட வீரராகவும் திகழ்ந்ததில் இருந்தே தனது தந்தையுடன் அவரும் இந்திய தேசத்தினை நேசிப்பது இதில் இருந்தே தெரிகிறது.

வாருங்கள் நாமும் மக்கள் நீதி மய்யத் தலைவருடன் வழி நடப்போம் !