சென்னை : டிசம்பர் 17, 2௦22

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) மற்றும் இந்த மசோதாவின் வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) செய்யப்படவுள்ள திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான காலவரையறை 02-01-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்றோடு முடிவடைய இருந்த கருத்துக்கேட்புக் காலகட்டமானது நீட்டிக்கப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும், மிக முக்கியமான இந்த மசோதாவானது அந்தந்த மாநில மொழிகளில் தரப்படவேண்டும் என்ற அடிப்படையில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படவேண்டும் என்றும் நம்மவர் அவர்கள் கோரியிருந்தார் நம்மவர் கடிதத்தில் குறிப்பிட்டபடி கருத்துக்கேட்பு காலத்தை தள்ளி வைத்த மத்திய அரசு, தலைவரின் இன்னொரு கோரிக்கையான இந்த மசோதா தமிழ் மற்றும் மாநில மொழிகளிலும் வெளியிடப்படவேண்டும் என்பதனையும் ஏற்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோள்.

I’ve written to Shri Ms Ashwini Vaishnav, IT Minister about the DPDPB, 2022 which has a draconian impact on the RTI Act converting it into Right to Deny Information Act! I’m forced to publically address the minister as the feedback process has been arbitrarily made secretive. Sir, the Draft bill is only available online in English and hence prevents millions of Indians to give their feedback. I urge you to extend the deadline for submission of feedback and prevent this dilution of the Right to Information Act. – Dr. Kamal Haasan, President, Makkal Neethi Miam