கோவை டிசம்பர் 18, 2022

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆணைக்கிணங்க வருகிற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோயம்புத்தூரில் தெற்குத் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை தெற்குத் தொகுதி காமராஜபுரம் பகுதியில் மாலை 6.3௦ மணிக்கு மேல் துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில இணை, துணைச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மா.துணை செயலாளர்கள், ஒன்றிய, கிளை மற்றும் வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்குறிப்பிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் மிகசிறப்பான கருத்துக்களை கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சித்தலைவரின் கொள்கைகள் மட்டுமில்லாது மய்யம் கட்சியின் செயல்பாடுகள் நற்பணிகள், கட்சிப்பணிகள், முக்கியநிகழ்வுகள் குறித்தும் தகவல்களையும் கருத்துகளையும் பேசிய முக்கிய ஆளுமைகள் அதனைத் தொடர்ந்து பேசிய அனைவரும் மிகச் சிறப்பான முன்னெடுப்புகளை தொகுத்து பேசியது குறிப்பிடத்தக்கது.