சென்னை – டிசம்பர் 13, 2௦22

ஏறு தழுவுதல் – பழம்பெரும் இலக்கியங்களில் (சுமார் 6 ஆம் நூற்றாண்டுகளில் விளையாடபட்டதாக அறியப்படுகிறது) பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வீர விளையாட்டு. மஞ்சு விரட்டு சல்லிக் கட்டு (ஜல்லிக்கட்டு) என்ற வேறு பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகிறது. இதில் பழக்கப்படுத்தப்படும் காளைகளை தமது பெற்ற பிள்ளையைப் போல் பராமரிப்பார்கள். அவற்றை தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே கருதுவார்கள். அக்காளைகளும் தனது உரிமையாளர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் சொல்பேச்சு கேட்கும். இன்னும் சொல்லபோனால் அவர்களின் சிறு குழந்தையைக் கூட ஒன்றும் செய்யாது பாசமுடன் விளையாடும் அற்புதங்களும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதுண்டு.

ஏறு என்பது காளை மாட்டினை குறிக்கும் அவற்றை ஓடவிட்டு விரட்டிப் பிடித்து அதன் கொம்புகளை மற்றும் திமிலை பலங்கொண்டமட்டும் பிடித்து தழுவி அதனை அடிபணியச் செய்வது. இதில் சல்லிக்கட்டு என்பது முறையே சல்லி எனும் சொல் புளியங்கம்பினால் வளையம் செய்து அதனை மாட்டின் கழுத்தில் கட்டுவார்கள் மேலும் சல்லி எனப்படும் நாணயத்தினை கொம்புகளில் கட்டிவிடுவார்கள் அதனை அணையும் வீரருக்கு பரிசாக கொடுத்து விடுவார்கள். பின்னாளில் உலக அளவில் செயல்பட்டு வந்த பீட்டா எனும் அமைப்பு இவ்விளையாட்டில் உண்டாகும் உயிரிழப்புகளும் மாடுகளின் இழப்புகளையும் குறிப்பிட்டு தடை வாங்கியதனால் சில வருடங்கள் நடத்தப்படாமல் முடக்கப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஜல்லிக்கட்டில் சொர்க்கபுரியாக திகழ்கிறது எனலாம். மேலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களும் பிரசித்தம் பெற்றதாகும். நாமக்கல்லில் அலங்கானத்தம், சேலம் தம்மம்பட்டி, கூளமேடு, தருமபுரி காரிமங்கலம், வேலூர் திருவண்ணாமலை ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனீ மாவட்டம் போன்ற ஊர்களில் தை மாதம் பொங்கல் நாளன்று வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் காயங்களும் மரணமும் சில நேரங்களில் எதிர்பாராமல் நிகழ்ந்து விடும் மேலும் காலை மாடுகளும் காயமடையும் என்பதால் தடை விதிக்கப்பட்ட இந்த விளையாட்டிற்கு புதிய சட்டமொன்றை இயற்றினார்கள் அதனூடே பல விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. பின்னர் இதன் மீது மீண்டும் சர்ச்சைகள் உருவாக ஒவ்வொரு வருடமும் சட்டப்போராட்டம் நடத்தியே தீர்வு காண வேண்டியிருந்தது. இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி நடத்திய போராட்டம் பல நாட்களாக நீடித்தது பின்னர் இறுதிநாளன்று கலவரம் உண்டானதால் அவர்களில் பலரை போலீசார் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிலும் வழிகாட்டுதலிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.

அதன் தொடர்ச்சியாக தற்போது நீதிமன்றத்தில் இந்த வீரவிளையாட்டின் பாரம்பரியம் கருதி அதனை தொடர்ந்து நடத்திட முனைந்துள்ள தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜரான இந்தியாவின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான திரு கபில் சிபல் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல வழிகளில் எழுப்பிய போதும் அக்கேள்விகளுக்கு மிக நீண்ட நெடிய தெளிவான விளக்கங்களும் அதையும் காத்திரமான வகையில் நான்காவது நாளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் முன்வைத்தார். இதில் உள்ள நியாய தர்மங்களை அலசி ஆராய்ந்த நீதிபதிகள் வழக்கின் தன்மையை உணர்ந்து தமிழகத்திற்கு சாதகமான ஓர் தீர்ப்பாய் வழங்குவார்கள் என அறிய நேர்கிறது.

இந்த வழக்கு குறித்தும் நாட்டின் பாரம்பர்ய வீர விளையாட்டினை நிச்சயம் எந்த வகையிலும் நாம் விட்டுக்கொடுக்காமல் அவற்றை சட்ட ரீதியாக அடைந்தே தீர வேண்டும் தனது ஆழ்ந்த தெளிவான கருத்தினை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.

ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம். – கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/maiamofficialna/status/1602667930046660608?s=20&t=ytdfxnKSHgI5D0OEvXHQmQ