சென்னை : டிசம்பர் ௦6, 2௦22

இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் புகழஞ்சலி.

நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே சிறப்பு. ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையுடையதே இந்தியா என்னும் சிந்தனையை விதைத்த பெருந்தகைமையாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம். – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

அண்ணல் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக,  துணைத் தலைவர் A.G. மௌரியா (Retd) அவர்களின் தலைமையில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் ஜங்சனில் இருக்கும் அண்ணல் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம், திரு வினோத் குமார், நம்மவர் தொழிற்சங்க பேரவை தலைவர் திரு பொன்னுசாமி செல்வி பிரகாஷினி, மாநில செயலாளர் திரு அர்ஜூனர், திருமதி ஸ்னேஹா மோகன்தாஸ், மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://twitter.com/maiamofficialna/status/1600151359944269825?s=20&t=ytdfxnKSHgI5D0OEvXHQmQ