கோவை – டிசம்பர் 15, 2௦22

மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமையன்று மாலை சுமார் 6.3௦ மணியளவில் பொதுக்கூட்டம்நடக்கவிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு தங்கவேலு அவர்களின் தலைமையில் துணைத்தலைவர் திரு A.G. மௌரியா மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் திரு கவிஞர் சிநேகன் அவர்கள் இருவரும் சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். அனைத்து மாநில செயலாளர்கள், மாநில இணை மற்றும் துணைசெயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருசேர பங்குகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் : 16.12.2௦22 நேரம் : மாலை 6.3௦ மணியளவில் இடம் : காமராஜபுரம் கோவை

கோவை மத்திய மாவட்டம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி நம்மவர் அவர்களின் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரத்தில் வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மாநில துணைத்தலைவர் R. தங்கவேலு தலைமையில் மண்டல செயலாளர் A.ரங்கநாதன் முன்னிலையில்,மத்திய மாவட்ட செயலாளர் D.பிரபு வரவேற்க, மாநில துணைத்தலைவர் A.G.மௌவுரியா மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி, ராகேஷ் மண்டலஅமைப்பாளர்கள் அருணா, ரம்யா, சித்திக், செல்வா, ஸ்ரீதர், மஞ்சுளா, மாவட்டச் செயலாளர்கள் தம்புராஜ், சிட்கோசிவா, மனோரம்யன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் துணைச்செயலாளர்கள் சத்யநாராயணன், கார்கில் கார்த்திகேயன், தனவேந்திரன், பாலசுப்ரமணியம், பொருளாளர் லாரன்ஸ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், மாநகரச் செயலாளர்கள் மணிக்கொடி, சரவணன், சிராஜ்தீன், தாஜுதீன், ராஜ் மனோகர், மாரியப்பன், தனசேகர், இளையபாரதி, ரமேஷ், ஆனந்தகுமரன் ஆகியோர் செய்து வருகின்றனர். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணைத்தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.