மதுரை – டிசம்பர் 14, 2022

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்குபெற சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மண்டலத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் கலந்து கொண்டு மய்யம் வளர்ச்சிப்பணிகள், மற்றும் வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் உரையாற்றினர்.

தலைவர் நம்மவர் அவர்களின் நல்லாசியுடன் மதுரை மண்டலத்தில் நடைபெற்று வந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த 66வது (130 தொகுதி) ஆலோசனை கூட்டம் மதுரை தென்மேற்கு மாவட்டத்தில் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் திரு சிவராஜா அவர்களின் முன்னிலையில், மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம், மாநில இணைச் செயலாளர் திரு ஜெய்கணேஷ், மாநில துணைச் செயலாளர் திரு P.S ராஜன், மண்டல செயலாளர் திரு அழகர், IT அணி மண்டல அமைப்பாளர் திரு V.P.ராஜா மற்றும் மய்ய நிர்வாகிகளின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் கலந்தாலோசனை குறித்த நிகழ்வு – மதுரை வடமத்திய மாவட்டம்

நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைப்படி, தொடர்சியாக நடைபெற்றுவரும் மாவட்ட நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கலந்தாலோசனை கூட்டம் நேற்று (13-12-2022) மதுரை வடமத்திய மாவட்டத்தில், மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ தலைமையில், மாவட்ட செயலாளர் திரு.அயூப்கான் முன்னிலையில், மாநில இணை செயலாளர் திரு ஜெய்கணேஷ், மாநில துணைச் செயலாளர் திரு P.S. ராஜன் மண்டல செயலாளர் திரு அழகர், IT அணி மண்டல அமைப்பாளர் திரு V.P. ராஜா, ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு முத்து, மகளிர் அணி மண்டல அமைப்பாளர் திருமதி பத்மா ரவிச்சந்திரன், ஆதிதிராவிட நல அணி மண்டல அமைப்பாளர் திரு.நாகநாதன், மதுரை வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு V.B. மணி மற்றும் மய்ய நிர்வாகிகளின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.