மதுரை : டிசம்பர் 2௦, 2௦22
கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்புள்ள பாலத்தை உடனே திறக்கக்கோரி கடந்த 14-12-2022 அன்று மாவட்ட செயலாளர்கள் திரு V.B மணி, திரு சிவராஜா, IT அணி மண்டல அமைப்பாளர் திரு V.P.ராஜா ஆகியோர் முன்னிலையில், மாநில செயலாளர் திரு சிவஇளங்கோ தலைமையில் பாலத்தின் மீது போராட்டம் நடத்தப்பட்டது. இன்னும் ஒருவாரத்திற்குள் பாலம் திறக்கப்படாவிடில், மய்ய நிர்வாகிகளே பாலத்தைத் திறந்துவைக்க நேரிடும் என்று ஊடகப்பேட்டி மூலம் அறிவிப்பும் கொடுக்கப்பட்டது.
மய்யம் கொடுத்த அழுத்தம் காரணமாக, நாம் போராட்டம் நடத்தியதிலிருந்து சரியாக 7வது நாளான இன்று பாலம் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல ஊடகப்பிரிவு அமைப்பாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஊடக ஒருங்கிணைப்பு இப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து பாலத்தை திறக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. பாலத்தைத் திறக்கக் குரல்கொடுத்ததற்காக உள்ளூர் பகுதி மக்கள் நமக்கு நன்றியைத் தெரிவித்தனர். நமது கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் நலனுக்கான மய்யத்தின் போராட்டங்கள் தொடரும் ! – மக்கள் நீதி மய்யம்
கடந்த பதினான்காம் தேதி மக்கள் நீதி மய்யம் மாநில &இணைச் செயலாளர்கள் ஆகியோர் மதுரையில் கட்சிவளர்ச்சிப்பணிகள் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் என கட்சிரீதியான சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த போது மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளின் சுட்டுதலில் மதுரை காமராஜர் பல்கலைகழகம் அருகில் கட்டப்பட்டிருந்த பாலம் நெடுநாட்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதை அறிந்த செயலாளர்கள் இதுகுறித்து செயலில் இறங்கினார்கள்.
மழையும் பெய்துகொண்டிருந்த போதே நிர்வாகிகளுடன் களத்தில் இறங்கினர். பாலம் துவங்கும் இடத்தில இருந்து அது நீளும் வரை பாலம் கட்டப்பட்ட காலம் துவங்கி அது முடிவுபெற்றது வரை ஆளும் தமிழக அரசையும் மதுரை உள்ளூர் நிர்வாகத்தினையும் நோக்கி பல கேள்விகள் எழுப்பியவண்ணம் தொடர்ந்த மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்கள் தடாலென ஓர் முக்கிய அதிரடியாக கட்டிமுடிக்கப்பட்டு காலம் கடந்தபின்னும் பாலம் திறக்கபடாமல் இருப்பது மக்களின் வரிப்பணம் வீணாவதை குறிப்பிட்டு பேசியவர் இன்னும் வரும் 7 நாட்களுக்குள் இந்த பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை எனில் மக்கள் நீதி மய்யம் அதன் நிர்வாகிகள் மற்றும் மக்களையும் பெருந்திரளாக கூட்டிக்கொண்டு பாலம் திறந்து வைக்கப்படும் என்பதை உறுதியாக அறிவித்தார்.
இதனை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி செயல்பாடுகள் முடிவு குறித்து உடனே காமராஜர் பலகலை அருகிலுள்ள பாலத்தினை இன்று (20.12.2022) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தது.
மக்களுக்காக மக்களால் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் என்பதற்கு இதுவே சாட்சி.