பழனி : டிசம்பர் ௦7, 2௦22

தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுத்தலின்படி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில், 05.12.2022 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (07-12-2022) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் தென்கிழக்கு மாவட்டத்தில், மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. மய்ய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கவும்

மாவட்டங்களில் கட்சி கட்டமைப்பை வலுவாக்கும் தொடர்பணியில் நேற்று (07-12-2022) மதுரை மண்டலம் திண்டுக்கல் தென்கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு வைத்தீஸ்வரன், மதுரை மண்டல செயலாளர் திரு அழகர் மாநில இணைசெயலாளர் திரு ஜெய்கணேஷ் மாநில துணைச் செயலாளர் திரு P.S. ராஜன் மதுரை மண்டல மகளிரணி அமைப்பாளர் திருமதி பத்மா ரவிச்சந்திரன் மதுரை மண்டல நற்பணி அமைப்பாளர் திரு சிவபாலகுரு, மாவட்ட செயலாளர் திரு ஸ்ரீனிவாச பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.

தலைவர்

@ikamalhaasan

அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகமெங்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டத்தின் 120வது தொகுதி கூட்டம் இன்று (09-12-2022) மாலை 6 மணிக்கு தேனி மேற்கு மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் திரு.கணேஷ்குமார் முன்னிலையில், மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. மய்ய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கவும்.