சென்னை : டிசம்பர் ௦4, 2௦22

உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளிகளுக்குப் பாராட்டுகள்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, இலவசக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழலை உருவாக்குதல் என அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை. உலக மாற்றுத்திரனாளிகள் தினம் டிசம்பர் ௦3, 2௦22

மக்கள் நீதி மய்யம்