சென்னை : டிசம்பர் 29, 2௦22
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு ! தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு ! பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்றனர்.
மேலும், அரசை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, கரும்பைச் சேர்த்து வழங்குமாறு மநீம அரசை வலியுறுத்தியது. இந்நிலையில்,மக்கள் நீதி மய்யம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.– மக்கள் நீதி மய்யம், தலைமை அலுவலகம், சென்னை
நிகழும் 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் பல குளறுபடிகள் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனால் மக்களிடையே பெரும் குழப்பத்தை உண்டாக்கியது மட்டுமல்லாமல் மிகுந்த அதிருப்தியை கொள்ளச் செய்தது. இது தொடர்பாக எழுந்த விவாதங்கள் என்னவென்றால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்யாமல் வடமாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்டு உணவுப்பொருள் வழங்குதல் துறையின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது. அந்த தொகுப்பில் இடம்பெற்ற பல பொருட்களில் குறிப்பாக கடுகு, சீரகம், மிளகு போன்றவை தரமற்று இருந்தது மேலும் மண்ட வெல்லம் உருகிய நிலையில் இருந்தது. மேலும் கொடுக்கப்பட்ட கரும்புத் துண்டுகளும் வாடி வதங்கி வற்றிப்போய் இருந்தது. இதற்கு என்ன காரணம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த முதல்வர் மற்றும் உணவுபொருட்கள் வழங்கும் துறை அமைச்சர் ஆகிய இருவரும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தனர். இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டதா என்ற தெளிவான தகவல் கிடைக்கப்பெறவில்லை (இது குறித்து மேற்கொண்ட தகவல்கள் கிடைக்கப்பெறின் இங்கே அவற்றை பதிவு செய்வோம்.
இதனிடையே வரும் 2௦23 ஆம் ஆண்டில் இதேபோல் பொங்கல் மளிகைப் பொருட்கள் மற்றும் கரும்பு கொடுக்கப்படுமா என்ற கேள்விகள் பலரிடையே பரவலாக எழுந்தவண்ணம் இருந்ததையடுத்து பல ஆலோசனைகளை துறை ரீதியாக ஆய்வு செய்த முதல்வர் இறுதியாக கடந்த முறை விநியோகம் செய்த பொருட்களின் தரம் கேள்விகுறியானதை அடுத்து பொதுமக்களின் கருத்துக்களை உணர்ந்து பொருட்களுக்கு பதிலாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ரூபாய் 1௦௦௦ ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் கரும்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்த போது தெளிவான எந்த உறுதியான அறிவிப்பும் முறையாக தெரிவிக்கப்படாததால் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கரும்புகளை அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே மதுரையைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி கோரிக்கை வைத்தனர்.
இதற்கு முறையான அறிவிப்பு எதுவுமின்றி காலதாமதம் ஆகவே விவசாயிகள் ஒன்றிணைந்து அறப்போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதனை கருத்தில்கொண்டு மதுரை கிழக்கு மக்கள் நீதி மய்யம் மாவட்ட விவசாய அணி அமைப்பாளரான திரு அழகுசுந்தரம் அவர்கள் மற்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மய்யத்தின் சார்பில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் அழகுசுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்து எந்த நியாயமான கோரிக்கைகளுக்கு அறப்போராட்டமே சிறந்ததும் தவிர்க்ககூடாத வழி என்றும் பேசி தொடர்ந்து இணைந்து போராடிய அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது (மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (மேலூர்) கீழே :
டெயில்பீஸ் : இம்மாதம் கடந்த 24 ஆம் தேதியன்று ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த போது “பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாததால் விவசாயிகள் போராடுகிறார்களே ? என அமைச்சர் திரு துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டபோது “கரும்பு சந்தையில் இருக்கிறது, வயலில் இருக்கிறது எங்கும் இருக்கிறது: என்று பதிலளித்து சென்றார். இப்படி விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அசட்டையான பதிலை தந்தது எங்கனம் முறையாகும் ?