சென்னை – ஜனவரி 2௦, 2௦23

காலத்தின் காரணமாக நாமும் நம்மைச் சுற்றியுள்ள புவியியல் வளர்ச்சியடைவது தவிர்க்கமுடியாதது. இதில் மனிதர்களின் வாழ்வாதாரம் சார்ந்ததாக இருக்கும் நாகரிகமும் சுற்றுச்சூழலும் வளர்ந்தே தீரும். அப்படி அடையும் பட்சத்தில் இயற்கைக்கு எந்த பாதகமும் இன்றி வளர்த்தல் வேண்டும். இயற்கையுடன் இயைந்து நாமும் வளர்வதென்பது சிறப்பே. அதனைவிடுத்து பாதகம் உணராமல் இயற்கையை சிதைப்பது ஒவ்வாத காரியமாகும். நாடு சுத்தமாக வைத்துக்கொள்வது அரசின் கடமை எனும் போது வீட்டினை சுத்தமாக வைத்திருப்பது அவரவர்களின் கடமை என்பதே நியதி. அதேசமயம் நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மையை பேணுவதும் பராமரிப்பதும் அரசின் கடமை என ஓர் நியதி இருக்கிறபோது இச்சமூகத்தில் வாழும் நாமும் நமது வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பது போல் நம்மைச் சுற்றியுள்ள இடங்களையும் அவ்வாறே பராமரிப்பதும் அடிப்படை மற்றும் தார்மீக கடமையாகும்.

அப்படி நாம் பராமரிக்காமல் போனதால் குப்பைக் கூளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவைகள் நீர்நிலைகளில் தேங்கி நச்சுதன்மையாய் மாறி இன்றைக்கு கரைந்த வடிவிலான ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள குப்பைக் கழிவுகளால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் ஆறுகளில் உள்ள தண்ணீர் அசுத்தமடைந்து அதில் எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் நதிகளில் மாதிரிகள் சேகரித்து ஆய்விற்குட்படுத்தப்பட்டு அதன் வெளியான முடிவுகளே நீங்கள் மேற்கண்டது. சுற்றுச்சூழல் எந்த பாதிப்புமின்றி மக்களின் வாழ்வியல் தாய்மையும் சுகாதாரமானதாகவும் வைத்துக் கொள்ளத் தேவையான திட்டங்கள பகுப்பாய்வு செய்து வைத்திருந்த மக்கள் நீதி மய்யம் மேற்குறிப்பிட்ட ஆய்வு பற்றிய எச்சரிக்கை அறிக்கையொன்றை ஊடகம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள். விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை. விவசாய அணி மாநில செயலாளர் Dr.G.மயில்சாமி அறிக்கை.